பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்89

மாடகக் கடைதிருத் தின்னரம் பார்த்துகிர்
   வடிம்புதை வருமந்நலார்
மகரயாழ், மழலைக்கு மரவங்க ணுண்டுகில்
   வழங்கக் கொழுங்கோங்குதூங்

காடகப் பொற்கிழி யவிழ்க்குமது ரைத்திருவொ
   டம்புலீ யாடவாவே.
ஆணிப்பொன் வில்லிபுசர் மாணிக்க வல்லியுடன்
   அம்புலீ யாடவாவே.    
(10)

8. அம்மானைப் பருவம்

74.
கரைக்குங் கடாமிரு கவுட்குட முடைந்தூற்று
   களிறுபெரு வயிறுதூர்ப்பக்
கவளந் திரட்டிக் கொடுப்பதென வுஞ்சூழ்ந்தொர்
   கலைமதிக் கலசவமுதுக்

கிரைக்கும் பெருந்தேவர் புன்கண் டுடைத்திட
   எடுத்தமுத கலசம்வெவ்வே
றீந்திடுவ தெனவுமுழு முத்திட் டிழைத்திட்ட
   எறிபந்தி னிரையென்னவும்

    (3) மாடகம் - முறுக்காணி. திரித்து - முறுக்கி. உகிர் - நகம். யாழ். மழலைக்கு. யாழ்ப்பாட்டாகிய மழலைக்கு. மரவம் - வெண்கடம்பு; அதன் மலர் துகில் போல்வது (சீவக. 1558.)

    (3-4) கோங்கின் மலருக்குப் பொன் உவமை. ஆடகப் பொற்கிழி - பொன்முடிப்பு.

    74. (அடி, 1) கரைக்கும் - ஒழுகவிடும். கவளாகிய குடம்; கவுள் - கன்னம். (பி-ம்.) ‘உடைத்தூற்றும்.’ களிறு: விநாயகர். தூர்ப்ப - நிறைப்ப. மதியாகிய கலசம்.

    (2) இரைக்கும் - மோகமுறும் (தக்க. 129, உரை) புன்கண் - துன்பத்தை. ஒரு கலசத்தை விரும்புபவர்களுக்கு வெவ்வேறு கலசம் ஈந்திடுவதென்பது ஒரு நயம். பந்தின் நிரை - பந்தின் வரிசை.