பக்கம் எண் :

90குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

விரைக்குந் தளிர்க்கை கொழுந்தா மரைத்துஞ்சி
   மீதெழுந் தார்த்தபிள்ளை
வெள்ளோ திமத்திரளி தெனவுங் கரும்பாறை
   மீமிசைச் செஞ்சாந்துவைத்

தரைக்குந் திரைக்கைவெள் ளருவிவை கைத்துறைவி
   அம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண்
   அம்மானை யாடியருளே.    
(1)

75.
திங்கட் கொழுந்தைக் கொழுந்துபடு படர்சடைச்
   செருகுதிரு மணவாளன்மேற்
செழுமணப் பந்தரி லெடுத்தெறியு மமுதவெண்
   திரளையிற் புரளுமறுகாற்

பைங்கட் கரும்பென விசும்பிற் படர்ந்தெழும்
   பனிமதி மிசைத்தாவிடும்
பருவமட மானெனவெ னம்மனைநி னம்மனைப் 
   படைவிழிக் கயல்பாய்ந்தெழ

வெங்கட் கடுங்கொலைய வேழக்கு ழாமிதென
   மேகக் குழாத்தைமுட்டி
விளையாடு மழகளிறு கடைவாய் குதட்டமுகை
   விண்டவம் பைந்துகோத்த

    (3) விரைக்கும் - மணம் வீசும். கையாகிய தாமரைமலரில், துஞ்சி. ஓதிமத்திரள் - அன்னத்தின் தொகுதி. அம்பிகை அன்னத்தை வளர்த்தல்: 83.

    (1-3) அம்மானைக்குச் சோற்றுருண்டையும் அமுதகலசமும் முத்துப் பந்தும் அன்னமும் உவமைகள்.

    (4) திரைக்கை - அலையாகிய கை. அருவியென்றது இங்கே நீரோட்டத்தை. (பி-ம்.) ‘பாகம் புகுந்த’; ‘பாகம் பகிர்ந்த’.

    75. (அடி, 1-2) அம்பிகை அம்மான் விளையாடும்போது அவ்வம்மானைகளின்மேல் திருவிழிகள்பாய்தலிக்குச் சில உவமைகள் கூறப்படும்.

    அமுதவெண்டிரளை - சோற்றுருண்டை. (பி-ம்.) ‘படர்ந்த வெண் பனிமதி’. அம்மனை - தாய், அம்மானை. அம்மானைக்குச் சோற்றுருண்டையும் மதியும், அதிற் பாய்கின்ற அம்பிகையின் திருவிழிக்கு வண்டும் மானும் உவமைகள்.

    (3)மேகக்குழாத்தை யானைக்கூட்டமென்றெண்ணி. இது - தொகுதியொருமை. மழகளிறு - விநாயகக் கடவுள்.