பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்91

அங்கட் கரும்பேந்து மபிடேக வல்லிதிரு
   அம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண்
   அம்மானை யாடியருளே.    
(2)

76.
கள்ளூறு கஞ்சக் கரத்தூறு சேயொளி
   கலப்பச் சிவப்பூறியும்
கருணைப் பெருக்கூற வமுதூறு பார்வைக்
   கடைக்கடை கறுப்பூறியும்

நள்ளூறு மறுவூ றகற்றுமுக மதியில்வெண்
   ணகையூறு நிலவூறியும்
நற்றரள வம்மனையொர் சிற்குணத் தினைமூன்று
   நற்குணங் கதுவல்காட்ட

உள்ளூறு களிதுளும் பக்குரவ ரிருவீரும்
   உற்றிடு துவாதசாந்தத்
தொருபெரு வெளிக்கே விழித்துறங் குந்தொண்டர்
   உழுவலன் பென்புருகநெக்

கள்ளூற வுள்ளே கசிந்தூறு பைந்தேறல்
   அம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண்
   அம்மானை யாடியருளே.    
(3)

    (3-4) அம்பு ஐந்தும் கருப்புவில்லும் அம்பிகைக்கு உரியன. அக்கரும்பைக் கண்டு விநாயகர் வாய் குதட்ட. குதட்ட ஏந்தும் என்க.

    76. அம்பிகையின் கரம், கண், நகை என்பவற்றால் அம்மானையின் நிறம் வேறுபடுதல் கூறப்படும்.

    (அடி, 1-2) பார்வைக்கடைக்கண் கறுப்பு - பார்வையையுடைய கடைக்கண்ணின் கறுப்பு. நள் ஊறு - நடுவிலே அமைத. மறுவாகிய ஊறு. சிற்குணம் - சித்தினது குணம்; சித்து - ஆன்மா. மூன்று நற்குணம் - சத்துவ ராஜஸ தாமஸ குணங்கள். அம்மானை பலநிறம் தோய்தல்: 82.

    (3) விழித்துறங்கும் தொண்டர்: “விழித்துறங்கும், உபாயந்தெரிவீர்” (பாசவதைப். 29); “விழித்த கண்குரு டாத்திரி வீரரும் பலரால்” (திருவிளை. 58 : 38.)

    (3-4) தொண்டர் என்புருக ஊறு தேறல்: 69.