| 7. பெரியநாயகியம்மை கலித்துறை |
|
| |
செச்சை மலர்புரை வானோடு மேனி திறந்துகொண்டு கச்சை யரவொன் றசைத்துக் கபாலங் கரத்தெடுத்துப் பச்சை மயிலனை யார்மனை தோறும் படர்ந்திரக்கும் பிச்சை யொழிகென் றொருவார்த்தை சொல்லெம் பெரியம்மையே.
|
(8) |
| |
| |
சோதிப் பதியன்றி வேறொரு தெய்வந் தொழுதற்கில்லை ஓதிற் பிறரென வச்ச முறாம லுயிர்களெல்லாம் நீதிப் புதல்வர்க ளாயின வாதலி னீகொள்கற்புப் பேதிப்ப தன்றுகண் டாய்குன்றை வாழும் பெரியம்மையே.
|
(9) |
| |
| |
நின்னேய நாயக னென்றிருப் பாய்நினை நீத்தகன்று தன்னேரில் பூவணத் தேயன்று போய்ச்செய்த தன்மையெலாஞ் சொன்னே னலேனினி நின்னோ டொளிப்பதென் சொல்லுவன்யான் பின்னே தெனக்குத் தருவாய்தென் குன்றைப் பெரியம்மையே.
|
(10) |
| |
| |
நற்றவத் துன்னைப் பெறுமலைக் கென்னமுன் னல்கியுனைப் பற்றுறக் கொண்ட தெலும்பே யணியும் பழமலைதான் சற்றெனக் கையந் தராதுசொன் னும்மலைச் சாதியுள்ளே பெற்றவர்க் கென்ன முலைவிலை குன்றைப் பெரியம்மையே.
|
(11) |
| |
| |
கற்றா ரறிகுவர் மக்கடம் பேறெனக் கட்டுரைத்த சொற்றா னொருபெண் ணொழித்ததென் பாரொடு தொல்லுலகின் நற்றாண் மகற்பெறு கென்றாசி சொல்பவர் நாணவுனைப் பெற்றான் மலையரை யன்குன்றை வாழும் பெரியம்மையே.
|
(12) |
| |
| |
கரிய மிடறுடைப் பெம்மான் கரத்துழைக் கன்றொடுமோர் அரிய முடியம் புலியோடு மேவிளை யாடுகின்றாய் தெரிய வரிய பதினா லுலகுமென் சிற்றிலென்பாய் பெரியவ ளென்ப துனக்கேது குன்றைப் பெரியம்மையே.
|
(13) |
| |
|
| |
8. அரவ கச்சை ஒன்று அசைத்து-பாம்புக் கச்சையொன்றைக் கட்டி. கபாலம்-மண்டை யோடு. 9. சோதிப்பதி-பேரொளி வடிவாகிய இறைவன். பேதிப்பதன்று-மாறுபடுத்தக் கூடியதன்று. 10. நேயநாயகன்-அன்பு பொருந்திய தலைவன். பூவணம்-திருப்பூவணம். கதை யான் கூறுவேன்; அதற்குக் காரணம் எனக்கு விளக்குக என்பது. ஏதுவென்பதற்கு எப்பொருளெனலும் ஒன்று. 11. நல்கி-கொடுத்து. பற்றுற-பற்றுண்டாகுமாறு. ஐயந்தராது-ஐயப்பாடு நேராமல். முலைவிலை-பரிசத்தொகை. 12. மக்கள்தம் பேறு-மக்களைப் பெறுதலின் பெருமையை. பெண்ணொழித்ததென்பது-மக்களென்னும் பொதுமொழி ஆண்பாலையே உணர்த்திற்றென்பது. என்பாரொடு சொல்பவர் நாணவென இயையும். தாள்-முயற்சி. 13. மிடறு-கழுத்து. உழைக்கன்று-மான்கன்று. அம்புலி-திங்கள். எதுவென்பது காரணப் பெயரெனவும், எவ்வாறெய்திற்றெனவும் பொருள்படும். இச்செய்யுள் சிலேடை.
|
|
|
|