| 7. பெரியநாயகியம்மை கலித்துறை |
|
| |
தண்ணா ரிதழி புனைவான் விழியிணை தம்மனைகள் பண்ணா வழிக்குமென் றோநின் றிருமுக பங்கயத்திற் கண்ணா யினருனக் கவ்வலை மாதுங் கலைமகளும் பெண்ணா ரமுதனை யாய்குன்றை வாழும் பெரியம்மையே.
|
(14) |
| |
| |
உள்ளத் துறுபிணி யேற்கு மருந்துக்கென் றுன்னைவந்து மெள்ளத் தொழவுந் திருமுலைப் பான்மெல் விரனுதியாற் றெள்ளித் துளியள வாயினுந் தொட்டுத் தெறித்திலையுன் பிள்ளைக்குங் கிள்ளைக்கும் பால்கொடுத் தாலென் பெரியம்மையே.
|
(15) |
| |
| |
ஆறாத் துயர்கொண் டடியேன் சலிப்ப வதுசெவியில் ஏறாம லேயிருந் தாலென்செய் வேனெங்க ளீசற்கொரு கூறாகி யண்ட முதலா யிளமை குலவுதவப் பேறாகி வாழ்பவ ளேகுன்றை வாழும் பெரியம்மையே.
|
(16) |
| |
| |
நனைமாட்சி மென்கொன்றைத் தாரோன் றருமிரு நாழிநெல்லால் வினைமாட்சி கொண்டுயி ரெல்லா மளித்தருண் மேன்மையினால் மனைமாட்சி யெய்து முனக்கே பெருங்கற்பு மாட்சியன்றிப் பினைமாட்சி யார்க்குண் டுலகீன்ற குன்றைப் பெரியம்மையே.
|
(17) |
| |
| |
நெடிய விலங்க லொருசிலை யாக்கிய நின்பதிமேற் கொடிய வநங்கன் சிலைபோ யெடுத்துமுன் கொண்டெதிர்ந்த ஒடிவி லருஞ்சிலைச் செங்கரும் போசொல் லுனதுநடுப் பிடியு ளடங்கிய தென்னிது குன்றைப் பெரியம்மையே.
|
(18) |
| |
|
| |
14. இதழி-கொன்றை மாலை. விழியிணை-சூரியசந்திர நேத்திரங்கள். 15. உள்ளத்துறு பிணி-மனநோய். கிள்ளையென்பது பிள்ளையென்பதற்கியைய இணைந்து வருமொழியாய்க் கிளியையுமுணர்த்திற்று. 16. சலிப்ப-கவலைப்பட. இளமைகுலவு-இளமை விளங்குகின்ற. 17. நனைமாட்சி-தேன்பொருந்திய பெருமையை உடைய வினைமாட்சி-காரியத்திறமை. கணவரளித்தது கொண்டு அறம் வளர்ப்பார்க்கே கற்புமாட்சி யுரித்தென்பது நூற்றுணிபாகலின் மனைமாட்சியெய்து முனக்கே பெருங்கற்பு மாட்சியெனவும், அஃதியற்றார்க்கு எங்ஙனமெய்து மென்பார் பினைமாட்சியார்க்குண்டெனவுங் கூறினார். 18. நெடிய விலங்கல்-மேருமலை. அநங்கன்-காமன். முன்பதிமேலெதிர்ந்தவெனவும், உனது நடு செங்கரும்போ இதுபிடியுளடங்கியதென் சொல் எனவுங் கூட்டுக. சிலைபோதல்-சிலையிற்றேர்தல். நடு-இடை.
|
|
|
|