முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
8. நன்னெறி
[இந்நூல் மக்கள் கடைப்பிடித் தொழுக வேண்டிய நல்வழிகளையெல்லாங் கூறுதலின் நன்னெறி என்று பெயர் பெற்றது. இந்நூலை அடிகளார் கடற்கரை மணலில் எழுதினரெனவும் பின் மாணவர்கள் ஏட்டில் எழுதினரெனவுங் கூறுவர். இந்நூலின் அருமையையும் பெருமையையும் நோக்கி இதனை அறநூல்களோடு சேர்த்துப் பயின்று வருவது நெடுங்கால வழக்கமாக இருக்கின்றது. இந்நூற்பொருளை இளைஞர்களேயன்றி மற்றவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.]
காப்பு
மின்னெறி சடாமுடி விநாயக னடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.
 
நூல்
என்று முகம னியம்பா தவர்கண்ணுஞ்
சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்-துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவு நயந்து.
(1)
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினி தேனையவர்
பேசுற்ற வின்சொற் பிறிதென்க-ஈசற்கு
நல்லோ னெறிசிலையோ நன்னுதா லொண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு.
(2)
தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட் குரியவராற் றாங்கொள்க-தங்கநெடுங்
குன்றினாற் செய்தனைய கொங்கையா யாவின்பால்
கன்றினாற் கொள்ப கறந்து.
(3)
பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம்-பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடனீர் சென்று புயன்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.
(4)
நீக்க மறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கி னவர்பெருமை நொய்தாகும்-பூக்குழலாய்
நெல்லி னுமிசிறிது நீங்கிப் பழமைபோற்
புல்லினுந் திண்மைநிலை போம்.
(5)
காதன் மனையாளுங் காதலனு மாறின்றித்
தீதி லொருகருமஞ் செய்பவே-ஓதுகலை
எண்ணிரண்டு மொன்றுமதி யென்முகத்தாய் நோக்கறான்
கண்ணிரண்டு மொன்றையே காண்.
(6)

பாமடந்தை-கலைமகள். மதிநிரை-திங்களின் வரிசை. தோளி-வினைக்குறிப்புப் பெயர். அழுமாறு கங்கணவர்தலையும் இவ்வாறாங்கொலென்னும் ஏக்கத்தா லென்க.1. முகமன்-இனிய வரவேற்புரை. பூவில்-பூவினால். பூங்கை துன்றுசுவையை நாவிற்கு நயந்துதவும்; அது தன்னைப் புகழவோ புகழ்தற்கன்று என்பது. 2. ஏனையோர்-தீயவர்கள். பிறிது-ஈண்டுக் கொடிதென்னும் பொருட்டு. நல்லோன்-சாக்கிய நாயனார். சிலை-கல். கருப்பு-கரும்பு; மகரம் பகரமானது வலித்தல் விகாரம். 3. தங்க நெடுங்குன்று-பொன்மலை. உரியவர்-நட்புடையவர். உறவினருமாம். ஒன்றை ஒருவரிடமிருந்து பெறவேண்டுமானால், அவர்க்கு உரியவர் மூலமாகப் பெறவேண்டும்.4. பேறு-செல்வம். புயல்-முகில். பெய்யா-பெய்து. 5.திண்மை-வலிவு. நொய்து-சிறுமை, இங்கு அற்பமாம். புல்லினும். தழுவினாலும். 6. ஓதுகலை எண்ணிரண்டும் ஒன்றும் மதி-சொல்லப்பட்ட பதினாறு கலைகளும் நிரம்பப்பெற்ற திங்கள். நோக்கல்-பார்த்தல். எண்ணிரண்டு கலையும் எனக்கூட்டுக. கணவனும் மனைவியும் ஒரு வேலையை ஒத்துச் செய்யவேண்டும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்