8. நன்னெறி |
|
|
வருந்து முயிரொன்பான் வாயி லுடம்பிற் பொருந்துத றானே புதுமை-திருந்திழாய் சீதநீர் பொள்ளற் சிறுகுடத்து நில்லாது வீதலோ நிற்றல் வியப்பு.
|
(12) |
|
|
பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட் கேற்ப விருப்ப மொடுகொடுப்பர் மேலோர்-சுரக்கும் மலையளவு நின்றமுலை மாதே மதியின் கலையளவு நின்ற கதிர்.
|
(13) |
|
|
|
12. பொருந்துதல்-பொருந்தியிருத்தல். பொள்ளல்-ஓட்டை. வீதல்-புறம் போதல். ஒன்பான் வாயில்-ஒன்பது துவாரம். புதுமை-அற்புதம், இங்கு வியக்கத்தகுவது. சீதம்-குளிர்ச்சி. 13. பெருக்கம்-மிகுதி. சுருக்கம்-குறைவு. கலை-நிலவொளி வளர்ந்தும் குறைந்தும் தோன்றும் நிலா.தன் கலைக்கேற்ப ஒளி தருவதுபோல் மேலான அறிவுடையவர்கள் தம்மிடத்துள்ள பொருளுக்கேற்றபடி பிறர்க்கு உதவுவர்.
|
|
|
|