8. நன்னெறி |
|
|
இல்லானுக் கன்பிங் கிடம்பொரு ளேவன்மற் றெல்லா மிருந்துமவற் கென்செய்யும் நல்லாய் மொழியிலார்க் கேது முதுநூ றெரியும் விழியிலார்க் கேது விளக்கு.
|
(15) |
|
|
தம்மையுந் தங்க டலைமையையும் பார்த்துயர்ந்தோர் தம்மை மதியார் தமையடைந்தோர்-தம்மின் இழியினுஞ் செல்வ ரிடர்தீர்ப்ப ரல்கு கழியினஞ்செல் லாதோ கடல்.
|
(16) |
|
|
ஆக்கு மறிவா னலது பிறப்பினான் மீக்கொ ளுயர்விழிவு வேண்டற்க-நீக்கு பவரா ரரவின் பருமணிகண் டென்றுங் கவரார் கடலின் கடு.
|
(22) |
|
|
பகர்ச்சி மடவார் பயிலநோன் பாற்றல் திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம்-நெகிழ்ச்சி பெறும்பூரிக் கின்றமுலைப் பேதாய் பலகால் எறும்பூரக் கற்குழியு மே.
|
(23) |
|
|
உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்கீழ் கொண்டு புகல்வதவர் குற்றமே-வண்டுமலர்ச் சேக்கை விரும்புஞ் செழும்பொழில்வாய் வேம்பன்றோ காக்கை விரும்புங் கனி.
|
(24) |
|
|
கல்லா வறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமதுகன நண்ணாரே-வில்லார் கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம் புணையிற் புகமொண் பொருள்.
|
(25) |
|
|
உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக் கடலின் பெருமை கடவார்-மடவரால் கண்ணளவாய் நின்றதோ காணுங் கதிரொளிதான் விண்ணளவா யிற்றோ விளம்பு.
|
(26) |
|
|
கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித் தம்மா லியலுதவி தாஞ்செய்வர்-அம்மா முளைக்கு மெயிறு முதிர்சவைநா விற்கு விளைக்கும் வலியனதா மென்று,
|
(27) |
|
|
|
15. இல்லான்-வறுமையுடையவன். மொழியிலார்-ஊமைகள். முது-பழைய. 16. தலைமை-பெருமை. இழியினும்-கீழானவர்களாக இருந்தாலும். அல்குகழி-சிறிய உப்பங் கழிநிலம். 22. ஆக்கும்-கல்வியால் உண்டாக்கும். மீக்கொண்ட-மேன்மையாகக் கொள்ளுகிற. அரவின்பருமணி-பாம்பின் சிறந்த மணி. கடு-நஞ்சு. 23. பகர்ச்சி-உரையாடல். பயில-பழக. நெஞ்சத்திட்பம்-மனத்திண்மை. நெகிழ்ச்சி பெறும்-தளர்ச்சியை அடையும். 24. குணம்-நல்லகுணம். கீழ்-கீழ்மக்கள். 25. கயவர்-கீழ்மக்கள். கனநண்ணார்-பெருமையை அடையமாட்டார்கள். வில்லார்கணை-வில்லிற்பூட்டுகிற அம்பு. நொய்து-கனமில்லாதது. 26. ஒண்புலவர்-பேரறிவு பொருந்திய புலவர்கள். மடவரல்-இளம்பெண். 27. உகவாமல்-விரும்பாமல். எயிறு-பல். வலியன-கடினமான உணவுப் பொருள்கள்.
|
|
|
|