| 8. நன்னெறி |
|
| |
பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி மன்னு மறிஞரைத்தா மற்றொவ்வார்-மின்னுமணி பூணும் பிறவுறுப்புப் பொன்னே யதுபுனையாக் காணுங்கண் ணொக்குமோ காண்.
|
(40) |
| |
|
| |
40. புனை-அணி. புனையா-அணியாத. பொன்னணிந்த பிறவுறுப்புக்கள் கண்ணுக் கொப்பாகாதது போல் பொன்னணியணிந்த அரசர்கள் புலவர்கட்கு ஒப்பாக மாட்டார்கள். மன்னும்-நிலைபெற்ற
|
|
|
|
|