| 9. திருவெங்கைக்கோவை |
|
| பெருநயப்புரைத்தல் |
| |
| |
கடக்கும் பவத்தர் திருவெங்கை வாணர் கனகவெற்பிற் குடக்கங் குமமுலை யாண்மாட் டலாமற் குலவளிகாள் நடக்குங் கமலமு நோக்குங் குவளையு நாணிலவை அடக்குங் குமுதமுங் கண்டதுண் டோவுங்க ளாவியிலே,
|
(24) |
| |
| தெய்வத்திறம்பேசல் |
| |
| |
நதிவசத் தாய சடையார் திருவெங்கை நாட்டொருவர் மதிவசத் தாலன்றி வான்கூன் மதிநுதல் வல்லிசதா கதிவசத் தால்வரும் வள்ளிதழ்ப் போதின் கடிமணம்போல் விதிவசத் தால்வரு நங்கேண்மை யாவர் விலக்குவரே.
|
(25) |
| |
| பிரியேனென்றல் |
| |
| |
பாவிடை வைத்த பெரும்புகழ் வெங்கைப் பழமலைகைம் மாவிடை வைத்த விகல்வாள் விழியெழின் மாதர்தமை நாவிடை வைத்தவன் மார்பிடை வைத்தவ னாணவகப் பூவிடை வைத்த நினையோ பிரிகுவன் பூங்கொடியே.
|
(26) |
| |
| பிரித்துவருகென்றல் |
| |
| |
உழைதொட்ட வங்கையர் வெங்கையர் ஞான வொளியர்வெற்பில் இழைதொட்டு விம்மி மலையோ டிகலு மிளமுலையாய் மழைதொட்டு நின்றவிப் பூம்பொழிற் புக்கு மணிமகரக் குழைதொட்டு மீளுநின் கண்போல் விரைந்து குறுகுவனே.
|
(27) |
| |
|
| |
24. கடக்கும் பவத்தர்-பிறவியைக் கடந்தவர். நடக்குங் கமலம்-நடக்கின்ற தாமரை மலரைப் போன்ற காலடி. நோக்குங்குவளை-கண். நிலவு-ஈண்டு முறுவலொளி. ஆவி-தடாகம். 25. சதாகதி வசத்தால் வரும்-காற்றின் வசப்பட்டு வருகின்ற. வள் இதழ்-வளவிய இதழ். 26. பாவிடை வைத்த-பாக்களிலே அமைத்து வைக்கப்பட்ட. கைமா-கையிலுள்ள மான். அகப்பூ-மனமாகிய மலர். 27. இழைதொட்டு-அணிகலன்கள் அணியப்பெற்று. விம்மி-பெருத்து. இகலும்-மாறுபடும். மழை தொட்டு நின்ற-முகில்கள் தவழுகின்ற. குழை-காதணி.
|
|
|
|