| 9. திருவெங்கைக்கோவை |
|
இடந்தலைப்பாடு தந்ததெய்வந்தருமெனச்சேறல் |
| |
| |
மின்றந்த வேணியர் வெங்கைபு ரேசர் மிகுமருளால் அன்றந்த வாரி நடுவே யொருவ னகற்றியிட்ட பொன்றந்த தெய்வமன் றோமலர் மாவைப் பொழிலிடத்தின் முன்றந்த தின்றுந் தருநெஞ்ச மேசெலின் முந்துறவே .
|
(37) |
| |
| முந்துறக்காண்டல் |
| |
| |
அங்கஞ் சுமந்த திருமார் புடைவெங்கை யானருளால் வங்கஞ் சுமந்த கடற்பிற வாமல் வருமமுதஞ் சிங்கஞ் சுமந்த கரியுட னேயொண் செழுந்தரளச் சங்கஞ் சுமந்தசெந் தாமரை தோன்றத் தனிவந்ததே.
|
(38) |
| |
| முயங்கல் |
| |
| |
மடலு மணமு மெனவே நிறைவெங்கை வாணர்தமைத் தொடலு மடியர் பெறும்பே றெனவிவ டோண்மருவி உடலு முயிரு மனமுமெ லாம்வளர்ந் தோங்குமின்பக் கடலு ளழுந்தி யவசமுற் றேதையுங் கண்டிலமே.
|
(39) |
| |
| புகழ்தல் |
| |
| |
நாங்குழை யாம லருள்வோன் றிருவெங்கை நாயகன்கைத் தாங்குழை யேயன்றி மென்முலை தாக்கித் தளருமிடைப் பூங்குழை யாயெப் படிகுதித் தாலுமிப் புல்லறிவாய் நீங்குழை யோநின் மதர்வே னெடுங்க ணிகர்ப்பதுவே.
|
(40) |
| |
|
| |
37. மின்தந்த-மின்னலைப் போன்ற; மலர் மாவை-தாமரை மலரில் இருக்கின்ற திருமகளைப் போன்றவளை. ஏலேலசிங்கர் எறிந்து விட்ட பொன்னுருண்டை மீண்டுங் கரைக்குவந்த செய்தி இப்பாட்டிற் குறிப்பிடப்பட்டது. 38. அங்கம்-எலும்பு. வங்கம்-மரக்கலம். சிங்கம்-சிங்கத்தைப்போன்ற இடை. கரி-யானையைப் போன்ற கொங்கை. தரளச் சங்கம்-முத்துக்களையுடைய கழுத்து. செந்தாமரை-செந்தாமரை மலரைப்போன்ற முகம். 39. மடல்-பூவிதழ். அவசமுற்று-பரவசப்பட்டு. நெஞ்சு-முன்னிலையெச்சம். ஏ-வியப்பிடைச் சொல். 40. குழைதல்-பிறவித் துன்பத்தால் வருந்துதல். உழையேயன்றி-மானேயல்லாமல். நீங்கு உழையோ-ஓடிப்போகின்ற மானோ. மதர்-மதர்த்த.
|
|
|
|