| 9. திருவெங்கைக்கோவை |
|
| தலைவனுற்றதுரைத்தல் |
| |
| |
மலைவன் பணியரி வின்னாண் கணைசெய்து வந்துவெங்கைத் தலைவன் புரமிரண் டொன்றே வெலவிச் சகமனைத்துஞ் சிலைவன் குணங்கணை வேழஞ் சுரும்பலர் செய்துவென்றோன் முலைவன் கிரியுற வந்தநண் பாவொரு மொய்குழலே.
|
(44) |
| |
| கற்றறிபாங்கன்கழறல் |
| |
| |
போதைப் பொதிந்திட் டிருடூங் களகப் பொருப்பிமைய மாதைக் கலந்த திருவெங்கை வாணர் மதுரைச்சங்க மேதைப் பசுந்தமிழ்ப் பாற்கட னீந்திய வீரமொரு பேதைக் குடைந்துநின் றாய்தகு மோசொல் பெருந்தகையே.
|
(45) |
| |
| கிழவோன்கழற்றெதிர்மறுத்தல் |
| |
| |
ஊணா மெனநஞ் சுவந்தோன் றிருவெங்கை யூரிலுயர் சேணா முலகம் வறிதாக வந்தவச் சேயிழையார் பூணார மென்முலை யின்பெருங் காட்சியும் பொய்யிடையின் காணாமை யுங்கண் டனையாயி னண்ப கழறலையே.
|
(46) |
| |
| கிழவோற்பழித்தல் |
| |
| |
அண்டா திபர்நந் திருவெங்கை நாயகர்க் கன்றியொரு பெண்டா லிதய முருகினை யாயிற் பெருந்தகைநீ விண்டா ரகைகண் டினியிந்து காந்தமு மெய்யுருகும் வண்டா மரைகளு மின்மினி தோன்ற மலர்ந்திடுமே.
|
(47) |
| |
|
| |
44. மலை-மேருமலை. வன்பணி-வலிய பாம்பு. அரி-திருமால். இரண்டொன்று-மூன்று. வன்குணம்-வலியநாண். மலை பணி அரி வில் நாண்கணை என்பனவும் சிலை குணம் கணை வேழம் சுரும்பு அலர் என்பனவும் நிரனிறை. வந்தணண்பா என்னும் பாடத்திற்கு மொய்குழல் வந்தனள் என்க ; வந்தனள் எனற்பாலது ஈண்டு அன் சாரியை தொக்கு நின்றதென்க. 45. போதை பொதிந்திட்டு-மலரைச் சூடி. மேதை-அறிவு பொருந்திய. உடைதல்-தோற்றல். 46. சேண் ஆம் உலகம்-விண்ணுலகம். சேயிழையார்-மாதரார். பொய்யிடை-நுண்ணிடை. 47. அண்டாதிபர்-தேவ நாயகராகிய சிவபெருமான். பெண்டால்-பெண்ணால். இந்து காந்தம்-சந்திரகாந்தக்கல். தாரகை-விண்மீன்கள்.
|
|
|
|