| 9. திருவெங்கைக்கோவை |
|
| தலைவனைவியத்தல் |
| |
| |
சூடும் பிறையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற் பாடுங் கவியு ளடங்காக் கவினுடைப் பாவையன்னார் கூடுங் குவிமுலைக் குன்றுங்கண் வேலையுங் கூந்தனெடுங் காடுங் கடந்துவந் தான்மிக வீரனங் காவலனே.
|
(57) |
| |
| தலைவியைவியத்தல் |
| |
| |
பருத்த குவிமுலைப் பாரத்தி னாற்கடற் பங்கயத்தில் இருத்த லரிதென வந்துவன் பூவி லிருக்குமிவர் விருத்த கிரிமகிழ் வெங்கைவெற் போன்மயல் வெள்ளங்கொண்ட வருத்த விதய மலர்மீ திருந்திட வல்லவரே.
|
(58) |
| |
| தலைவன்றனக்குத்தலைவிநிலைகூறல் |
| |
| |
இயலாற் சிறந்த திருவெங்கை வாண ரிமையவெற்ப மயலாற் புரிந்த முலையானை யின்முன் மதர்மழைக்கட் கயலாற் கலக்குவித் துன்கலை வேலையைக் காரளகப் புயலாற் பருகுவித் தார்நின்று ளார்தண் பொழிலிடத்தே.
|
(59) |
| |
| தலைவன்சேறல் |
| |
| |
ஏழா முலகும் புகழ்வெங்கை வாண ரிமையவெற்பில் ஆழா தெனைநெடுங் காமக் கடனின் றணைத்தெடுப்பார் தாழா திசையளி மூசுமென் பூந்துணர்த் தண்கொம்பரே சூழாய மாக நடுநிற்ப ரோவிந்தச் சோலையிலே.
|
(60) |
| |
| தலைவியைக்காண்டல் |
| |
| |
தளைப்பாச நாசகர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பிற் களைப்பான் மதிமுகக் காரிகை யீர்தண் களபமுலைக் கிளைப்பார மென்பெருந் தோண்மே லிருத்திநை கின்றவிடை இளைப்பாற வோதனி நின்றீரிக் காம ரிளம்பொழிற்கே.
|
(61) |
| |
|
| |
57. கூடும்-ஒன்றோடொன்று நெருங்கிய. நந்தலைவன் மலையையுங் கடலையுங் காட்டையுங் கடந்து வந்தான் என்னும் நயங்காண்க. 58. கடல் பங்கயத்தில்-கடலில் தோன்றிய தாமரைப் பூவில். வன் பூவில்-வலிய நிலத்தில். 59. இயலால்-எல்லா இலக்கணங்களாலும். கலைவேலை-கலைக்கடல். கயல்-சேல்மீன். புயல்-முகில். பருகுவித்தல்-குடிப்பித்தல். 60. ஏழாம் உலகும்-ஏழுலகங்களும். பூந்துணர்-பூங்கொத்துக்கள். 61. களை-அழகுள்ள. காரிகையீர்-அழகையுடையவரே! காமர்-அழகிய.
|
|
|
|