| 9. திருவெங்கைக்கோவை |
|
| கலவியின்மகிழ்தல் |
| |
| |
துதிவாய் தொறுங்கொளு மென்மலர்ப் பூம்பொழில் சூழ்ந்தவெங்கைப் பதிவாய் வரையிள மானோ டமர்ந்த பரனருளாற் றிதிவாய் மதியமிர் தம்போ லலாமற் சிறந்தமுக மதிவா யமிர்தமுண் டோம்வந்து கூடவிம் மங்கையரே.
|
(62) |
| |
| புகழ்தல் |
| |
| |
சங்கந் துறந்தன்ன மில்லாம லேயொரு தாளினின்று பொங்கம் புனலிற் றவம்புரிந் தாலும் புரைகுவிரோ அங்கம் பலவணிந் தார்வெங்கை வாண ரணிவரைமேல் இங்கம் புயமுகை காளிந்த மாத ரிளமுலைக்கே.
|
(63) |
| |
| பாங்கியொடுவருகெனப்பகர்தல் |
| |
| |
பங்கே ருகத்திற் கடுத்தசெங் காவிப் பனிமலர்போல் நுங்கே ளெனுமுயிர்ப் பாங்கியொ டேமறை நூன்முகத்திற் சங்கேத மாம்பெயர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில் இங்கே வருகவென் னெஞ்சா லயத்தி லிருப்பவரே.
|
(64) |
| |
| பாங்கிற்கூட்டல் |
| |
| |
கார்கண்ட மஞ்ஞையுஞ் செந்தே னிரம்பக் கடைதிறக்குந் தார்கண்ட வண்டுந் திருவெங்கை நாயகர் தாண்மலரின் சீர்கண்ட வன்பரும் போலேநிற் கண்டு சிறக்குமுளப் போர்கண்ட வேற்கண் மடவாரை மேவுக பூங்கொடியே.
|
(65) |
| |
பாங்கிமதியுடன்பாடு தோற்றத்தாலாராய்தல் |
| |
| |
எனையா டியபதந் தாள்வோன் றிருவெங்கை யேந்திழைநீ சினையா டியமணிப் பொன்னூச லாடிச் செழுங்குவளைச் சுனையாடி வண்டல் விளையாடி முத்தந் துவன்றியவம் மனையாடி வந்தனை யோதிரு மேனி வருந்தியதே.
|
(66) |
| |
|
| |
62.2, துதி-முதனிலைத் தொழிற்பெயர். வரையிளமான்-இமயமலையில் தோன்றிய உமாதேவி. பரன்-மேலானவன். திதி-வளர்ச்சி. 63. சங்கம்-கூட்டம், சங்குகள். அன்னம்-சோறு, அன்னப் பறவைகள். புரைகுவிரோ-ஒப்பாவீரோ? அங்கம்-எலும்பு. அம்புயமுகைகள்-தாமரை மொட்டுகள். 64. சங்கேதம் ஆம்பெயர்-சங்கேதமாகிய பெயரையுடைய. நெஞ்சாலம்-உள்ளக்கோயில். கேதமாகிய பெயரையுடைய. நெஞ்சாலயம்-உள்ளக்கோயில். 65. கார்கண்ட-முகிலைக்கண்ட. தார்கண்ட-பூவரும்பைக்கண்ட. கடை திறக்கும்-வாயிலைத் திறக்கிற; ஈண்டு இதழ்க்கதவு. தார்-மலரும் பருவத்துப் பேரரும்பு. சிறத்தல்-மகிழ்தல். 66. சினையாடிய-மரக்கிளையிற் கட்டிய. முத்தம் துவன்றிய-முத்துக்கள் நெருங்கப் பதித்த. வண்டல்-மகளிர் விளையாட்டில் ஒன்று.
|
|
|
|