| 9. திருவெங்கைக்கோவை |
|
| பாங்கியாற்றுவித்தகற்றல் |
| |
| |
ஆனுக் களித்த கொடியாளர் வெங்கை யணிநகராய் பானுக் களித்து வருங்காலை நீவரிற் பைந்தொடிக்கைத் தேனுக் களிக்கு மலர்த்தொடை வார்குழற் றேமொழியெம் மானுக் களித்துக் கலையாக் குவனுன்கை வண்டழையே.
|
(103) |
| |
| இரந்துகுறைபெறாதுவருந்தியகிழவோன் மடலேபொருளெனமதித்தல் |
| |
| |
எண்ணைவிட் டோங்கும் புகழாளர் வெங்கை யிமையவெற்பில் விண்ணைவிட் டெய்து மிவட்டரு வாயென மேவியுழும் பண்ணைவிட் டூர்தொறும் புக்கிரப் பாரிற் பசியமடற் பெண்ணைவிட் டோர்பெண்ணை நாம்வேண்டி நிற்பது பேதைமையே.
|
(104) |
| |
| பாங்கிக்குலகின்மேல் வைத்துரைத்தல் |
| |
| |
வாமத் துமைமகிழ் வெங்கைபு ரேசர் மணிவரைமேல் தாமக் குவிமென் முலைமட்டு வார்குழற் றையனல்லாய் நாமக் கடலைக் கலமிவர்ந் தேறுவர் நானிலத்தோர் காமக் கடலை மடன்மா விவர்ந்து கடப்பர்களே.
|
(105) |
| |
| அதனைத்தன்மேல் வைத்துச்சாற்றல் |
| |
| |
பாவாக்கி யைப்பெண் பனையாக வாண்பனை பாட்டருளுந் தேவாக்கி யாளுந் திருவெங்கை வாணரிற் றேர்ந்தெருக்கம் பூவாக்கி மாலை யணிந்துபொன் னேயொரு பொற்பனையை மாவாக்கி நாளையும் மூர்நடு வீதி வருகுவனே.
|
(106) |
| |
|
| |
103.03. பானு-கதிரவன். தேனுக்கு-வண்டுகளுக்கு. எம்மான்-எம்முடைய தலைவி. 104.04. எண்ணை-எண்ணத்தை. பண்ணைவிட்டு-வயலைவிட்டு. பசிய மடற்பெண்ணை-பச்சையான மடலோடு கூடிய பனை; பனை மடல். ஓர் பெண்ணை-பாங்கிப்பெண்ணை. மடலேறுதலை விட்டு இரப்பது அறிவின்மையென்க. 105.05. மட்டுவார் குழல்-தேனொழுகுங் கூந்தல். நாமம்-அச்சம். கலம் இவர்ந்து-மரக்கலமேறி. மடன்மா-மடற்குதிரை. 106.06. தேவாக்கி-தெய்வத்தன்மை பொருந்திய வாக்கையுடையவரை. தேர்ந்து-ஆராய்ந்து. மாவாக்கி-குதிரையாகச் செய்து.
|
|
|
|