| 9. திருவெங்கைக்கோவை |
|
| பாங்கி தலைமகளவயவத்தருமை சாற்றல் |
| |
| |
மந்தா கினியணி வேணிப்பி ரான்வெங்கை மன்னவநீ கொந்தார் குழன்மணி மேகலை நூனுட்பங் கொள்வதெங்ஙன் சிந்தா மணியுந் திருக்கோ வையுமெழு திக்கொளினும் நந்தா வுரையை யெழுதலெவ் வாறு நவின்றருளே.
|
(107) |
| |
| தலைமகன்றன்னைத்தானேபுகழ்தல் |
| |
| |
ஐயா னனமுடை யார்வெங்கை வாண ரணிவரைமேற் பொய்யா விளமுலை மங்கைநல் லாரிடை பொய்யென்பதை மெய்யாகச் சாதித் தெழுதா விடிற்புகழ் வேண்டியயான் கையா லெடுத்தது தூரிகை யேயன்று காரிகையே.
|
(108) |
| |
| பாங்கியருளியல்கிளத்தல் |
| |
| |
வென்றிப் படைநன் மழுவுடை யார்திரு வெங்கையிலே குன்றிற் பொலியுங் குவிமுலை யாளொடு கூடவெண்ணி நின்றிப் படிதளர் வேலண்ண லேயென்று நீக்கமற அன்றிற் பெடையொடு வாழ்வதன் றோபனை யாவதுவே.
|
(109) |
| |
| பாங்கிகொண்டுநிலைகூறல் |
| |
| |
மூலத் தனிமுத லானார் திருவெங்கை மொய்வரையாய் நீலத் தடங்கண்ணி னாட்குன் குறைசொல நேர்ந்திலளேற் கோலத் தளிரியன் மாதின் கருங்கட் குடங்கவரத் தாலத் திவர்க நினையாவர் பின்னைத் தடுப்பவரே.
|
(110) |
| |
|
| |
107.07. மந்தாகினி-விண்ணகக் கங்கை. கொந்து-பூங்கொத்துகள். நுட்பம்-நுண்மை. நந்தா-கெடாத. ஆர்தல்-பொருந்தல். 108.08. ஐயானனம்-ஐந்து திருமுகம். அவை ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம் என்பன. இவை ஐந்தும் ஐந்தொழில்களையும் நடத்துவன. தூரிகை-ஓவியமெழுதுங் கோல். 109.09. வென்றிப் படை-வெற்றியைத் தருகிற படை. அன்றில்-கிரௌஞ்சப் பறவை. நீ பனைமடலைக்கொண்டு மடலேறப் பனை மடலையழிப்பதாகக் கூறுகிறாய் ; எந்நாளும் இணைபிரியாதவைகளாகிய அன்றில்கள் அம்மரத்தில் வாழ் கின்றன. அவை மரத்தைப் பிரிய நேரும் என்றாள். 110.10. மொய்-வலிமை. நேர்ந்திலளேல்-உடன்படாளாயின். தாலத்து-பனை மரத்தின். கட்குடத்தைக் கவரப் பனையிலேறுக என்னும் பொருளுந் தொனிக்கின்றது.
|
|
|
|