| 9. திருவெங்கைக்கோவை |
|
| பாங்கி யென்னைமறைத்தபி னெளிதென நகுதல் |
| |
| |
குற்றா லமுந்தென் றிருவால வாயுங் குடியிருப்புப் பெற்றார் பவர்திரு வெங்கையி லேயெங்கள் பெண்ணணங்கின் முற்றா முலையை யெனைமறைத் தின்ப முயங்குறுதல் கற்றா வினைமறைத் தேயதன் பாலைக் கறப்பதுவே.
|
(115) |
| |
| அந்நகைபொறாஅ தவன்புலம்பல் |
| |
| |
தடாது விளங்கொளி யானார் திருவெங்கைத் தையனல்லாய் படாது வளர்முலை யால்வரு நோயைப் பரிகரித்து விடாது நகைசெய் திகழ்வ தளற்றில் விழுந்தவரை எடாது மரும முருவச்செவ் வேல்கொண் டெறிவதுவே.
|
(116) |
| |
| பாங்கி தலைவனைத் தேற்றல் |
| |
| |
தொடர்ந்தாளும் வெங்கைப் பழமலை வாணரச் சுந்தரர்சொற் கடந்தாலு மென்சொற் கடவாள் வரிச்செங் கயன்மருட்டும் விடந்தா ழயிற்கண் மடமான் றருமயல் வெள்ளத்திலே கிடந்தா குலமுற்றி டேல்விடு வாயுன் கிலேசத்தையே.
|
(117) |
| |
| பாங்கி கையுறையேற்றல் |
| |
| |
ஏக நிலைத்த வுமைபாகன் வெங்கை யிமையவெற்பில் மாக நிலத்தி லரிதாய வின்பம் வளர்ந்தெழுமே பாக நிலப்பிறை வாணுத லாடன் பரவையல்குற் போக நிலத்திலிட் டாளைய னேயுன்கைப் பூந்தழையே.
|
(118) |
| |
|
| |
115.15. ஆர்தல்-வாழ்தல். பெண்ணணங்கு-பெண் தெய்வம். முயங்குறுதல்-புணரப்புகுதல். 116.16. தடாது விளங்கொளி-ஒரு பொருளாலுந் தடுக்கப்படாமல் விளங்குகிற ஒளி. பரிகரித்தல்-ஒழித்தல். அளறு-சேறு. மருமம்-மார்பு. 117.17. தொடர்ந்தாளல்-எழுமையுந் தொடர்ந்தாளுதல். மடமான்-உவமையாகுபெயர். மால்-மையல். வெள்ளம்-பெருக்கு. ஆகுலம்-வருத்தம். 118.18. ஏகம் நிலைத்த-ஒன்றாந்தன்மை நிலைபெற்ற. மாகநிலத்தில்-விண்ணுலகத்தில். மாகம்-விண்; மா-கம் எனப் பிரித்துப் பெரிய விண் எனினுமாம். பரவை-பரப்பு.
|
|
|
|