| 9. திருவெங்கைக்கோவை |
|
| பாங்கியக்சுறுத்தல் |
| |
| |
சுனைக்காவி யன்ன விழிநீ புனத்திற் சுகங்கடியா துனைக்காதல் செய்தவர் தம்பொருட் டாக வுலைதல்கண்டு வினைக்கா டெறியு மழுவார் திருவெங்கை வெற்பிலன்னை தினைக்காவன் மற்றொரு வர்க்களித் தாலென்னை செய்குவையே.
|
(151) |
| |
| நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல் |
| |
| |
தம்மா வியுந்தந் தலைவரும் வேறு தருமவரே அம்மா வுலகிற் பிரிந்திருப் பாரளி மூசுமதக் கைம்மா வுரியர் திருவெங்கை வாணர் கனகவெற்பில் எம்மா வியேயவ ரென்றாற் பிரிகுவ தெவ்வண்ணமே.
|
(152) |
| |
| தலைவிக்கவன்வரல் பாங்கிசாற்றல் |
| |
| |
கடிக்குங் கரும்பு மதவேள் சிலையவன் கைப்பகழி முடிக்குங் கடிமல ராமினிக் கேள்வெம் முயலகன்மேல் நடிக்குங் கமல பதத்தார் திருவெங்கை நாடனையாய் வடிக்குஞ் சுடரிலை வேலன்பர் தேரின் மணிக்குரலே.
|
(153) |
| |
| சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல் |
| |
| |
தழலாற் கடிய வளியே நறுமென் றழைகள்கொய்யக் கழலார்ப் புறுமென் பதத்தார் புனத்தினுங் காவகத்துஞ் சுழலாத் திரியுங் கிளிகா ளினிவெங்கைச் சோதிவெற்பில் நிழலாற் பொலிந்த விளம்பொழிற் கேயிரு நெஞ்சுவந்தே.
|
(154) |
| |
| முன்னிலைப்புறமொழி மொழிந்தறிவுறுத்தல் |
| |
| |
தொண்டா வெமையுடை யான்வெங்கை சூழிளஞ் சோலையிற்பூந் தண்டா தளவு மளிகா ளுமக்குத் தகாதுகண்டீர் கண்டா னினைந்துபின் காணாத போதெங் களைமறக்கும் வண்டா ரிறைவ ரொடுகூடி யெம்மை மறப்பதுவே.
|
(155) |
| |
| முன்னின்றுணர்த்தல் |
| |
| |
நனைகாத்த பூமட வார்விழி யாக நயந்தருளங் கனைகாத்த பாகர்தம் வெங்கையி லேவண்டு காவிமலர்ச் சுனைகாத்த வெற்பெமர் வேலண்ண லேயிச் சுகங்கடிந்து தினைகாத்த வெம்மைத் துயர்புகக் காப்பர் செறித்தினியே.
|
(156) |
| |
|
| |
151. காவி-கருங்குவளை மலர். புனம்-தினைப்புனம். கடிதல்-ஓட்டுதல். உலைதல்-வருந்துதல். வினைக்காடு-தீவினைக்காடு. எறிதல்-அறக்களைதல். 152. அளி-வண்டு. மூசல்-மொய்த்தல். கைம்மா-யானை. உரி-தோல். கனகம்-பொன். ஆவி-உயிர். ஏ : இரங்கற் குறிப்பு. 153. கடிக்கும் கரும்பு-நீ கடித்துண்ணங் கரும்பாகும். முடிக்கும்-தலையில் அணிந்து கொள்ளும். 154. தழல்-கவண். கொய்தல்-பறித்தல். பதம்-பாதம். கா-சோலை. நெஞ்சு வந்து இரும் என இயைக்க. 155. வள்தார்-வளவிய பூமாலை. அளவுதல்-அளைதல். 156. அங்கனை-பெண். செறித்து-இற்செறித்து, காப்பர்-காவல்செய்வர். பூமடவார் என்றது திருமகள். கலைமகள், மண்மகள் என்பவரை.
|
|
|
|