| 9. திருவெங்கைக்கோவை |
|
| இறைமகளாடிட நோக்கியழுங்கல் |
| |
| |
நீடுந் தினையிற் கிளிநோக் குதலென நின்றுநம்மோ டாடுந் தலைவர் வரனோக் கிதணு மவருடனே கூடுந் தொழின்மறைக் குஞ்சுனை யோடலர் கொய்யுமலர்க் காடும் பிரிவுறச் செய்வதென் னோவெங்கைக் கண்ணுதலே.
|
(161) |
| |
| பாங்கியாடிடம் விடுத்துக்கொண்டகறல் |
| |
| |
வயிரோ சனனுக் குலகீந் தவர்வெங்கை மன்னனுக்குப் பயிரோ டுறவற நீத்தாளென் றெண்ணிப் பழுதுரையல் செயிரோ சிறிது மிலாக்கிளி காடன் சிறுகுடிலுக் குயிரோ டரிவை நடந்துசென் றாளென் றுரைமின்களே.
|
(162) |
| |
| பின்னாணெடுந்தகை குறிவயினீடுசென்றிரங்கல் |
| |
| |
தன்னோ டிருந்த பொழுதிளஞ் சோலைசெய் தன்மைகண்டேற் கன்னோ தனியிருந் தாற்செய்யு மாறு மறிவிக்கவோ மின்னோ வெனநின் றவிர்சடை யார்திரு வெங்கைவெற்பில் என்னோ வறிந்தருள் செய்வான் வராம லிருந்ததுவே.
|
(163) |
| |
| வறுங்கள நாடிமறுகல் |
| |
| |
பெறுங்கள நஞ்ச முடையா ரடியவர் பிள்ளைதனை அறுங்கள மென்னு மொருவெங்கை வாண ரணிவரைமேல் நறுங்கள வன்ன குழனீங்க மங்கல நாணிழந்த வறுங்கள மென்ன விருந்ததந் தோவிம் மணியிதணே.
|
(164) |
| |
|
| |
161. தினையில்-தினைப்புனத்தில். என்னோவென்னுமோகாரம் இரங்கல். 162. வயிரோசனன்-மகாபலி. இவன் விரோசனன் என்பவனுடைய மகனாகையால் வயிரோசனன் எனப்பட்டான். செயிர்-குற்றம். 163. தன்னோடு-தலைவியோடு. இளஞ்சோலை செய்தன்மை-இன்பம். தனியிருந்தாற் செய்யுமாறு-துன்பம். என்னோ: இரங்கற் குறிப்பு; வியப்பீடைச் சொல்லுமாம். 164. களம்-கழுத்து. அடியவர் என்றது சிறுத்தொண்டரை. பிள்ளையென்றது. சீராளனை. வறுங்களம்-வெறுங்கழுத்து. தலைவியிருந்தபோது மங்கலமாகக் காணப்பட்டது பின் தலைவி சென்றபிறகு அமங்கலமாகக் காணப்பட்டதென்பது கருத்து.
|
|
|
|