| 9. திருவெங்கைக்கோவை |
|
| குறுந்தொடிவாழு மூர்நோக்கி மதிமயங்கல் |
| |
| |
அறத்தா றுடையர் நுகர்பெரும் போக மறமறியா மறத்தா றுடையர் விரும்புதல் போலும் வளர்சடையின் புறத்தா றுடையர் திருவெங்கை வாணர் பொருப்படைந்த குறத்தா றுடையர் மடமாதை மேவக் குறிப்பதுவே.
|
(165) |
| |
இரவுக்குறி இறையோ னிருட்குறிவேண்டல் |
| |
| |
பொருந்தா ரரணம் பொடித்தோர் பவப்பிணி போக்குதற்கு மருந்தா மிறைவர் திருவெங்கை வாணர் வரையனையீர் திருந்தார் கலியிற் புகுந்துநன் மீன்வரச் செய்துமக்கு விருந்தாக வைத்தகன் றானளி யேனையவ் வெய்யவனே.
|
(166) |
| |
| பாங்கிநெறியின் தருமைகூறல் |
| |
| |
அங்க முழுவணி யானோன்றென் வெங்கை யரனருண்மா தங்க முழுமத யானையன் றாடகற் சாடுமொரு சிங்க முழுவரி யன்றென வேழமுஞ் சீயமுஞ்சேர் துங்க முழுவன மெவ்வா றிருள்வரச் சொல்லுவதே.
|
(167) |
| |
| இறையோனெறியின தெளிமைகூறல் |
| |
| |
பங்கந் தனக்கிலன் வெங்கையி லேநும் பணைமுலைமா தங்கந் தனக்குமம் மாதங்க பாரந் தரிக்குமிடைச் சிங்கந் தனக்குத் தளர்வதல் லாமற் சினவிலங்கின் சங்கந் தனக்கொரு நானோ தளர்குவன் றாழ்குழலே,
|
(168) |
| |
|
| |
165. அறத்தாறு-அறநெறி. நுகர்தல்-அனுபவித்தல். பெரும்போகம்-பேரின்பம். உடையர்-பாவிகள். குறத்தாறு-குறவர் மரபு. 166. பொருந்தார்-பகைவர். அரணம்-மதில். ஆர்கலி-கடல். மீன்-உடுக்கள். 167. மாதங்கம்-யானை. ஆடகன்-இரணியன். முழு அரி-முழுச் சிங்கம். துங்கம்-உயர்ச்சி. முழுவனம்-பெருங்காடு. 168. எக்காலத்தும் அழிவற்றவனாகையால் இறைவனைப் பங்கந் தனக்கிலன் என்றார். பணைத்தல்-பருத்தல். சங்கம்-கூட்டம்.
|
|
|
|