| 9. திருவெங்கைக்கோவை |
|
| பாங்கி யவனாட்டணியியல் வினாதல் |
| |
| |
போதேது கொய்வ ரிழையே தணிவர் பொழில்விளையாட் டேதேது செய்வர் புனலேது தோய்வ ரெமைத்துதிப்பிற் றீதேது மில்லை யெனும்வெங்கை வாணர் செழுஞ்சிலம்ப சூதே தெனுமுலை யாருங்க ணாட்டியற் சொல்லுகவே,
|
(169) |
| |
| கிழவோனவணாட் டணியியல் வினாதல் |
| |
| |
என்னாட் டணியிய லென்னாயி னென்னுனக் கென்றனக்குப் பொன்னாட் டணியிய லெல்லாங் கவர்ந்து புகழ்மலிந்த சொன்னாட் டணியியல் வெங்கைபு ரேசர் சுடர்கிரிசூழ் நின்னாட் டணியிய லெல்லா முரைத்தரு ணேரிழையே,
|
(170) |
| |
| அவற்குத் தன்னாட்டணியியல் பாங்கிசாற்றல் |
| |
| |
பிறைக்கோலஞ் செய்யு நுதுற்சூட் டணிகுவர் பெய்வளையால் இறைக்கோலஞ் செய்வர் சினையா டுவரவ் விரதிதனைச் சிறைக்கோலஞ் செய்யும் விழியார்தம் வெங்கைச் சிலம்பமதன் நறைக்கோலஞ் செய்ய நறைக்கோலஞ் செய்வரென் னாட்டவரே.
|
(171) |
| |
| இறைவிக் கிறையோன் குறையறிவுறுத்தல் |
| |
| |
வன்மானு மென்முலைச் சேயரி வாட்கண் மடந்தைநல்லாய் வின்மான் மதிக்கை யரவிந்தம் வாடவவ் வேள்விதரும் நன்மான் கரத்தர்தம் வெங்கையி லேயிற்றை நாளிரவில் நின்மான் மதிமுகங் காண்பான் விரும்பு நெடுந்தகையே,
|
(172) |
| |
|
| |
169. இழை-அணிகலன். பொழில்-சோலை. தோய்தல்-மூழ்குதல். சூது-சூதாடு கருவி, 170. பொன்னாட்டு-தேவருலகத்தின். சொல் நாட்டு-சொல்லை நிலைநிறுத்தின. நேரிழை-அன்மொழித் தொகை. கவர்தல்-பற்றுதல்.171. நுதற் சூட்டு-நெற்றிச்சுட்டி. பெய்தல்-இடுதல். இறை-முன்கை. ஆடுதல்-குளித்தல். நறைக்கோல்-மணமுள்ள மலர்க்கணை. 172. வல்மானும்-சூதாடு கருவியை ஒக்கும். சேயரி-செவ்வரி. வில்-ஒளி.
|
|
|
|