| 9. திருவெங்கைக்கோவை |
|
| நேராதிறைவி நெஞ்சொடுகிளத்தல் |
| |
| |
ஒலியா லசையச் சருகெழத் தோகை யுடன்குதிப்பப் புலியா வெனவெழக் குஞ்சர மோடப் புளிநரெல்லாம் மெலியா விரையும் வனத்தே யிறைதிரு வெங்கைவெற்பில் மலியா ரிருள்வர நெஞ்சமெவ் வாறு வலிப்பதுவே.
|
(173) |
| |
| நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தல் |
| |
| |
மின்னோடு வந்த விரிசடை யோன்றிரு வெங்கைவெற்பர் மன்னோடு நீயிருள் வந்தே கெனச்சொன் மடந்தைநல்லாய் என்னோடு கூடி யிருப்பது போல விருந்துமனம் உன்னோடு கூடி னினியேது நானிங் குரைப்பதுவே.
|
(174) |
| |
| நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்குரைத்தல் |
| |
| |
கொலையைக் குறித்த விலைவே லவநின் குறிப்பிசைய முலையைப் புணர்மென் கொடியிடை யாடன் முரணுமனச் சிலையைக் கரைத்துவந் தேனொரு நான்வெங்கைச் செல்வரைப்போல் மலையைக் குழைக்கவும் வல்லே னினியிந்த மாநிலத்தே,
|
(175) |
| |
| குறியிடைநிறீஇத் தாய்துயிலறிதல் |
| |
| |
விந்தா சலமுனி மாதவன் போற்றரன் வெங்கைவெற்பில் சந்தா டவிகண் முறித்தெறி வேலொடு தண்புனத்தில் வந்தா குலநமக் காக்கிய வாரணம் வந்துற்றதோ நந்தா வனத்திற் பறவையெல் லாமு நரல்கின்றவே,
|
(176) |
| |
|
| |
173. குஞ்சரம்-யானை. தோகை-சினையாகுபெயர். மலியார் இருள்-மிகப்பெரிய இருள். வலிப்பது-உறுதி கொண்டிருப்பது. 174. மின்னோடுவந்த-மின்னோடு கூடிவிளங்குகிற. மன்னோடு-தலைவனோடு: 175. ஒருநான்-ஒப்பற்ற நான். முரணும்-மாறுபட்ட-மனச்சிலை-மனமாகிய கல். 176. விந்தாசலம்-விந்தமலை. முனி-சினந்த. சந்தாடவிகள்-சந்தனக்காடுகள். ஆகுலம்-வருத்தம். நரலல்-ஒலித்தல்.
|
|
|
|