| 9. திருவெங்கைக்கோவை |
|
| இறைவிக் கிறைவன் வரவறிவுறித்தல் |
| |
| |
மேனைக் குரிய மருமக னார்திரு வெங்கைவெற்பில் மானைக் கடந்து செவியள வோடு மதர்விழியாய் யானைக் கரியு மரிக்குச் சரபமு மாகியிந்தக் கானைக் கடந்துவந் தாருயிர் போலுநங் காவலரே,
|
(177) |
| |
| அவட்கொண்டு சேறல் |
| |
| |
முருந்தா நகையுமை பங்காளர் வெங்கை முதுகிரிமேல் இருந்தா மரைகண் மறுத்தவிப் போதி லிதழ்திறந்து விருந்தா மளிகட் கினிதூட்டு மல்லிகை மென்மலர்கொய் தருந்தா ரணிகுவ னில்லா தெழுந்தரு ளாரணங்கே,
|
(178) |
| |
| குறியுய்த்தகறல் |
| |
| |
காதா ரமுதம் பெறவேண்டி யன்றொரு காரிகைபாற் றூதாய் நடந்த திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற் போதார் மலர்மல் லிகையொடு முல்லையும் போய்க்கொணர்வேன் பாதார விந்தம் வருந்தா திவணிற்க பைங்கொடியே.
|
(179) |
| |
| வண்டுறைதாரோன் வந்தெதிர்ப்படுதல் |
| |
| |
தாட்டா மரையென் றலைக்கணி வோன்வெங்கைத் தண்சிலம்பிற் றீட்டா வொருநடை யோவியம் போலுந் திருவுருவீர் ஆட்டா னெனுங்கதி ரேடாங் கதவடைத் தாங்கதன்மேற் பூட்டா மளியுறப் பூட்டிற்றன் றோவுங்கள் பூவகமே.
|
(180) |
| |
| பெருமகளாற்றின தருமைநினைந்திரங்கல் |
| |
| |
விண்டெரி யாது முகிலான் முகில்பொழி வெள்ளத்தினால் மண்டெரி யாதெவ் வகையடைந் தாயன்ப மாறன்வயற் கண்டெரி யாவிரு ளிற்போ மருமை கருதியன்றோ பண்டெரி யாயொளிர் வெங்கைப் பிரான்பதம் பாலித்ததே.
|
(181) |
| |
|
| |
177. மேனை-மேருமலையின் மகள்; மலையரசன் மனைவி; இவளுக்கு மநோரமை என்றும் பெயருண்டு. கங்கையும் உமாதேவியும் இவளுடைய பெண்கள். மானைக்கடந்து-மானைவென்று. கான்-காடு. 178. முருந்து-மயிலிறகின் அடி. பங்காளர்-இடப்பாகத்திலுள்ளவர். 179. காதாரமுதம்-சுந்தரருடைய தேவாரப்பாடல்கள். காரிகை-பரவையார். ஆர்தல்-உண்டல். போது-பேரரும்பு. 180. தாட்டாமரை-தாளாகிய தாமரை; தாமரை மலர்போலுந் தாள். தீட்டல்-எழுதுதல். நடை ஓவியம்-நடத்தலைச் செய்யும் ஓவியம். 181. வெள்ளம்-நீர்ப் பெருக்கு. மாறன்-இளையான் குடிமாறநாயனார். பதம்-திருவடி. பாலித்தல்-தந்தருளல்.
|
|
|
|