| 9. திருவெங்கைக்கோவை |
|
| புரவலன் றேற்றல் |
| |
| |
முன்காட்டு பந்தமும் வீடுமுள் ளோன்வெங்கை மொய்வரைசூழ் கொன்காட்டி லுன்குழல் போலே யிருண்டவிக் கூரிருள்வாய் பொன்காட்டு நல்லெழி லுன்னிடை போலப் புயனுடங்கு மின்காட்டி வந்ததிங் குன்னூர் வழியை விழியினுக்கே.
|
(182) |
| |
| புணர்தல் |
| |
| |
ஓர்போ தெனும்பிறை வேணியிற் சூடு மொருவர்வெங்கை தேர்போ லகன்ற மணியல்கு லாயிரு செய்யவிள நீர்போ லமைந்தின்ப மேதிரண் டாங்குறு நின்முலைகள் மார்போ டழுந்தத் தழுவவென் னான்செய்த மாதவமே.
|
(183) |
| |
| புகழ்தல் |
| |
| |
பெண்காட் டியவொரு பங்குடை யாருதிர் பிட்டினுக்கா மண்காட் டியபொன் முடியார் திருவெங்கை வாணர்வெற்பிற் றண்காட் டியமலர்க் கோதாய் குரும்பைக டாமொருமுக் கண்காட்டு மாயினு மொவ்வ நினதொரு கண்முலையே.
|
(184) |
| |
| இறைமகளிறைவனைக் குறிவரல்விலக்கல் |
| |
| |
அரவெளி தோவவ் வனமெளி தோவன்றி யாற்றின்மடுக் கரவெளி தோநந் திருவெங்கை வாணர் களமருட்டும் இரவெளி தோவிவை யெல்லாங் கடந்திங் கெனையளிப்ப வரவெளி தோவென் னுயிர்க்கர ணாகிய மன்னவனே.
|
(185) |
| |
| அவனிறைவியை யில்வயின்விடுத்தல் |
| |
| |
வலம்பொலி வீர மழுவாளன் வெங்கை மணிவரைமேல் நலம்பொலி வாணுதல் வேற்கணல் லாயுன் னடைவிரும்பி அலம்பொலி யோடு தொடரோ திமமிலை யஞ்சலைதாட் சிலம்பொலி யாமற் பரிகரித் தேகுன் றிருமனைக்கே.
|
(186) |
| |
|
| |
182. பந்தம்-பிறவிப் பிணிப்பு. வீடு-திருவடிப்பேறு. மொய்-வலி. கொன்-பெருமை. கூர்-மிகுதி. பொன்-திருமகள். நுடங்கல்-அசைதல்; துவளல். 183. ஓர்போதெனும் பிறை-ஒருகலையை உடைய திங்கள். வேணி-சடை. தேர்-தேர்த்தட்டு. 184. மண்காட்டிய-மண்சுமந்த. பொன்முடி-அழகிய திருமுடி. 185. அரவு-பாம்பு. வனம்-காடு. கரவு-முதலை. எனை அளிப்ப-என்னைக் காக்க. 186. வலம்-வெற்றி. ஓதிமம்-அன்னம். பரிகரித்து-அடக்கி. அலம்புதல்-ஒலித்தல்.
|
|
|
|