| 9. திருவெங்கைக்கோவை |
|
| தோழிதலைமகடுயர்கிளந்துவிடுத்தல் |
| |
| |
வம்பு குறித்து வருமா ரளியின மல்லிகைப்பூங் கம்பு குறிக்கும் பொழுதில்வெங் கேசரைக் கைதொழுது நம்பு குறிக்கண் வருமண்ண லேநின் னகரினிற்போய்க் கொம்பு குறித்து வரக்காட் டொலியையெங் கொம்பினுக்கே.
|
(191) |
| |
| திருமகட் புணர்ந்தவன் சேறல் |
| |
| |
முப்போ தினுமந் தணர்தொழு தேத்துறு முத்தலைவேல் அப்போ தகன்றிரு வெங்கையன் னாளல்குற் காடரவம் ஒப்போ தெனவொண் மணிவிளக் கேற்றி யுதவிசெய்யுஞ் செப்போ திளமுலை யாய்செல்லு வேனென் றிருநகர்க்கே.
|
(192) |
| |
இரவுக்குறியிடையீடு இறைவிக் கிகுளை யிறைவர வுணர்த்தல் |
| |
| |
வள்ளலம் பாகு மரியாளன் வெங்கை மணிவரைமேல் விள்ளலம் பானல் விழியாய் துணைபுணர் மென்சிறகர் உள்ளலம் பாது துயில்கூர் தருத லொழிந்தெழுந்து புள்ளலம் பாநின்ற தென்னோ நமதிளம் பூம்பொழிற்கே.
|
(193) |
| |
| தான்குறி மருண்டமை தலைவி யவட்குணர்த்தல் |
| |
| |
கானலை வேனின் முதிர்வா லெதிருறக் கண்டுமறி மானலை நீரென வோடுதல் போல்வெங்கை வாணர்வெற்பிற் றேனலை வார்தொடை யார்குறி யாமெனச் சென்றுநைந்தேன் பானலை வென்றகண் ணாய்குறி வேறுறப் பைம்பொழிற்கே.
|
(194) |
| |
|
| |
191. வம்பு-மணம்; போராட்டமுமாம். குறித்தல்-ஊதுதல். குறி-குறித்தவிடம். கொம்பு-ஊதுகொம்பு. 192. ஏத்துறும்-போற்றுகின்ற. போதகன்-ஞானாசிரியன். செப்பு-செப்புக் கிண்ணம்.193. அரி-திருமால். வள்ள லம்பாகு மரியாளன்-திருமாலை வலிய அம்பாக வுடையவன். மணி-அழகு. விள்ளல்-மலர்தல். பானல்-கருங்குவளை. 194. கானல்-கானல்நீர். இது பேய்களுக்குத் தேராதலால் இதனைப் பேய்த்தேர் என்பர். மறிமான்-மான் கன்று. பானல்-கருங்குவளை.
|
|
|
|