| 9. திருவெங்கைக்கோவை |
|
| என்பிழைப்பன்றென் றிறைவி நோதல் |
| |
| |
அஞ்சா மதற்றெறும் வெங்கைபு ரேச ரணிமிடற்றில் நஞ்சா மிருளிற் குறிபிழை யாதொரு நான்குறித்துத் துஞ்சா திருந்துந்துஞ் சுற்றா ளெனவவர் தூற்றப்பட்டேன் எஞ்சா வமுதனை யாயினி நானிதற் கென்செய்வதே.
|
(204) |
| |
| தாய் துஞ்சாமை |
| |
| |
கயிற்றா னிகழர வம்போற் சகந்தனிற் கற்பனையாக் குயிற்றா நிகழிறை வெங்கையி லேயெழுங் கூன்பிறையோர் எயிற்றா னிகழு மிளம்பேதை யாமிவ் விரவுவந்த துயிற்றா வனைதனை வெங்கால தூதர் துயிற்றுகவே.
|
(205) |
| |
| நாய் துஞ்சாமை |
| |
| |
சுளைவாய் மடைதிறக் கும்பல வான்வயற் றோன்றுசெந்நெல் விளைவாய் மலியுந் திருவெங்கை வாணர்தம் வெற்பிடைமா தளைவாய் மடமயி லேதனி வேழந் தனையொருபுன் வளைவாய் ஞமலி குரைத்திங் குறாமன் மறித்ததுவே.
|
(206) |
| |
| ஊர் துஞ்சாமை |
| |
| |
நீர்துஞ்சுஞ் செஞ்சடை யார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பில் வார்துஞ்சு மென்முலைக் கோமள மேவந்து மால்வரைமேற் கார்துஞ்சு மாவின மெல்லாமுன் றுஞ்சக் கடலுந்துஞ்ச ஊர்துஞ்சி லாததென் னோவிது நான்செய்த வூழ்வினையே.
|
(207) |
| |
| காவலர் கடுகுதல் |
| |
| |
தேவாதி தேவர் திருவெங்கை வாணர் சிலம்பர்நமை மேவாத வண்ணங் கதிர்வேன் மருட்டும் விழிமடவாய் கூவா மறுகிற் றிரிகா வலர்கையிற் கொட்டுபறை வாவா வெனநெய்த லம்பறை கூவுநம் வாய்தலுக்கே.
|
(208) |
| |
|
| |
204.04. தெறும்-வென்ற. துஞ்சுற்றாள்-தூங்கினாள். தேவர்கள் முதலானோரைக் காத்தமை நோக்கி ‘அணிமிடறு’ என்றார். எஞ்சாவமுது-குறையாத அமுதம். 205.05. கயீறு-பழுதை. அரவம்-பாம்பு. கற்பனை-இல்லதை உள்ளதுபோற் கற்பித்தல். குயிற்றல்-செய்தல். எயிறு-பல். 206.06. மாதளைவாய்-மாதுளங்கனிபோலும் வாய். மாதளை- மாதுளம் பூவுமாம். ஞமலி-நாய். மறித்தல்-தடுத்தல். 207.07. ஊர்-ஊரிலுள்ளாரை யுணர்த்தலால் ஆகபெயர். வார்-கச்சு. வரை-மூங்கில். கார்-முகில். மா-விலங்கு. வார் துஞ்சு மென்முலைக் கோமளம் என்றது பாங்கியை. 208.08. தேவாதி தேவர்-தேவர்களுக்கெல்லாம் முதல் தேவர். சிலம்பர்-வெற்பர். மேவல்-கூடல். மருட்டல்-வெருட்டல். நெய்தற்பறை-சாப்பறை. அறைகூவுதல்-வலிந்தழைத்தல்.
|
|
|
|