| 9. திருவெங்கைக்கோவை |
|
| நிலவு வெளிப்படுதல் |
| |
| |
ஒழுங்கி யிருந்த சடையாளர் வெங்கை யொருவர்வெற்பில் புழுங்கி யிருந்த மனத்தன்பர் தாம்வந்து போமளவும் மழுங்கி யிருந்து மிளிர்திங் களையொரு வாளரவம் விழுங்கி யிருந்து விடாதுகொ லோதளிர் மெல்லியலே.
|
(209) |
| |
| கூகை குழறுதல் |
| |
| |
நாகா பரணர் திருவெங்கை நாயகர் நல்லடிக்கன் பாகா தவரெனக் கூகூவென் றத்தி யதிலிருந்து நீகா வலரை விலக்குகின் றாயுயிர் நீத்திலனேற் கூகாய் நினதடல் காண்பேன் விடியிற் கொடிமுன்னமே.
|
(210) |
| |
| கோழி குரல்காட்டல் |
| |
| |
வாய்மை யெனினும் புலரியைக் கூறுதல் வாரணங்காள் சேய்மை யறுநங் கொழுநர்தங் கூட்டஞ் சிதைத்தெமக்குத் தீமை பயந்தமை யால்வெங்கை நாயகர் செய்தவறத் தூய்மை யுணர்ந்தவர் வாய்மையன் றாமெனச் சொல்லுவரே.
|
(211) |
| |
வரைதல் வேட்கை தலைமகளைப்பாங்கி பருவரல் வினவல் |
| |
| |
என்னிடத் துற்ற குறையுள வோநம்மை யீன்றவன்னை தன்னிடத் துற்ற முனிவோ வுலகந் தருமிமய மின்னிடத் துற்ற பழமலை யார்திரு வெங்கையன்னாய் நின்றிடத் துற்றதென் னோவுரை யாய்நின் னினைவினையே.
|
(212) |
| |
| அருமறை செவிலி யறிந்தமைகூறல் |
| |
| |
வேலையி லேவரு நஞ்சமுண் டார்திரு வெங்கைவெற்பில் மாலையி லேவண் டிசைபாடு மென்குழல் வாணுதலாய் சோலையி லேநங் கொழுநர்வந் தேகதிர் தோன்றுசிறு காலையி லேதரு மாலையன் னோவன்னை கண்டனளே.
|
(213) |
| |
|
| |
209.09. ஒழுங்கி-ஒழுங்காகி. புழுங்குதல்-வருந்துதல். மழுங்கி-ஒளிகுன்றி. மிளிர்தல்-விளங்குதல். 210.10. பிறவிப் பெருங்கடற்கொரு மரக்கலமாதல்பற்றி இறைவன் திருவடியை நல்லடி யென்றார். அன்பு-ஆகுபெயர். காவலர்-அரசர்(தலைவர்) அத்தி-ஒருமரம்; என்புக் குவியலுமாம். விலக்கல்-தடுத்தல். கூகாய்-கூகை; விளி. கொடி-காக்கை. 211.11. வாய்மை-உண்மை. புலநீ-வைகறை. சேய்மை-தொலை. கொழுநர்-கணவர். கூட்டம்-கூடுதல். 212.12. முனிவு-சினம். இமயமின்-மலையரையனீன்ற மின்கொடி போல்வாள். இடம்-இடப்பாகம். நினைவு-கருத்து. 213.13. வாணுதலாய்-ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே.சிறு காலை-கதிரவன் தோன்றுஞ் சமயம்.
|
|
|
|