| 9. திருவெங்கைக்கோவை |
|
| தலைமகன் வருந்தொழிற் கருமைசாற்றல் |
| |
| |
தாயுஞ் சுணங்கனு மூரும்வெங் காவலுஞ் சந்திரனாந் தீயுங் குடிஞையுஞ் சேவலுந் தப்புஞ் செயலெளிதோ பாயுஞ் சினவிடை யார்வெங்கை வாணர் பனிவரைமேற் காயுங் கதிரிலை வேல்வீரர் நம்மைக் கருதினுமே.
|
(214) |
| |
| தலைமகனூர்க்குச் செலவொருப்படுதல் |
| |
| |
அறிவே யொருவடி வாமீசர் வெங்கையி லன்னமன்னாய் எறிவே லிறைவர்தம் மூர்க்கேகி யாங்கவ ரெண்ணமெல்லாம் அறிவே மவரன் பிலாமைகண் டாலுரை யாடலமாய் மறிவே மறிந்தபி னந்தக னூர்க்கு வழிக்கொள்வமே.
|
(215) |
| |
| பாங்கியிறைவனைப் பழித்தல் |
| |
| |
வன்பற் றவர்தொழும் வெங்கைபு ரேசர் மணிவரைமேல் நின்பற் றிலர்கை விடுத்தா ரிறையவர் நீயவர்மேல் அன்பற் றிலையணங் கேசிறி தேனுமன் பற்றவரைப் பின்பற் றுவருள ரோவிது தான்மிகப் பேதைமையே.
|
(216) |
| |
| இறைவி யிறையோன்றன்னைநேர்ந் தியற்படமொழிதல் |
| |
| |
சுரும்பு களிக்கும் பொழில்வெங்கை வாணர் சுடர்க்கிரிமேல் அரும்பு கடுக்க முலையா யுலகுள வாவியெல்லாம் விரும்பு கொடைத்தண் ணளிவேந்தர் நம்மை வெறுப்பவரோ கரும்பு கசப்பது வாய்க்குறை யேயிந்தக் காசினிக்கே.
|
(217) |
| |
|
| |
214.14. சுணங்கன்-நாய். குடிஞை-கூகை. பாயுஞ் சினவிடை-பகைவரைப் பாய்வதுஞ் சினப்பதுஞ் செய்யும் விடை. 215.15. இறைவர் அறிவே உருவாகப் பெற்றவராகையால் அறிவேயொரு வடிவாமீசர் என்னப் பெற்றார். மறிதல்-மீடல். அறிதல்-ஆராய்தல். 216.16. வன்பு-வன்மை. வலிய பற்று-மிக்க அன்பு. பின்பற்றுதல்-பின்தொடர்தல். 217.17. சுரும்பு-வண்டுகள். கடுத்தல்-நிகர்த்தல். தண்ணளி-அருள். காசினிக்கு-உருபுமயக்கம்.
|
|
|
|