| 9. திருவெங்கைக்கோவை |
|
| கனவுநலிபுரைத்தல் |
| |
| |
ஓடுஞ் செயல்செயு மாசைத் தளையை யொடித்திருத்தல் கூடும் படிசெயும் வெங்கைபு ரேசர் குவட்டில்விழி மூடும் பொழுதெதிர் தோன்றிநிற் பார்கண் முகிழ்திறந்தால் நீடும் புகழுடை யாரெதிர் தோன்றிலர் நேரிழையே.
|
(218) |
| |
| கவினழிபுரைத்தல் |
| |
| |
ஈயார் பொருளு மிறையாக் கிணறு மெனத்துணைவர் தோயா முலைக ணலமிழந் தேன்மதி சூடுமொரு மாயா மயமலர் வெங்கைபு ரேசர் மணிவரைமேல் வேயாம் பணைபுரை மென்றோட் கருங்கண் விளங்கிழையே.
|
(219) |
| |
| தன்றுயர்தலைவற்குணர்த்தல் வேண்டல் |
| |
| |
விழிக்கிட னாகு நுதலார்தம் வெங்கையில் வேந்தொடுபெண் பழிக்கலை யென்றொரு வார்த்தையை யாரும் பகர்ந்துமிகுஞ் சுழிக்கிட னாகுந் திருப்பாற் கடலெனத் தோன்றுபுகழ் மொழிக்கிட னாகுது மென்பாரைக் கண்டில மொய்குழலே.
|
(220) |
| |
| துன்புறுபாங்கி நீசொல்லெனச்சொல்லல் |
| |
| |
பொறியா லயம்பொய்கை சூழ்வெங்கை வாணர்தம் பூங்கரத்தில் மறியா மெனப்பிறழ் சேயரி வாட்கண் மடந்தைநல்லாய் பிறியாதுன் னுள்ளத் திருப்பார்க் கயலவர் பேசுவதென் அறியா தவர்தமக் கன்றோ வொருவ ரறிவிப்பதே.
|
(221) |
| |
|
| |
218.18. ஓடுஞ் செயல்-மனத்தினை அலையச் செய்யுஞ் செயல். ஆசைத் துளை-அவாவாகிய விலங்கு. கூடும்படி-உண்டாகும்படி. குவடு-மலை. விழிமூடல்-கண்ணுறங்கல். 219.19. ஈயார்-உலோபர். துணைவர்-தலைவர். தோய்தல்-புணர்தல். நலம்-அழகு. மதி-திங்கள் துண்டம். மாயாமயமலர்-மாயையைக் கடந்தவர். 220.20. மொய்குழல்-அன்மொழித் தொகை. விழிக்கிடனாகு நுதலார் என்றது கண்ணுதலார் என்றபடி. வேந்து-ஆகுபெயர். 221.21. பொறி-திருமகள். ஆலயம்-இடம். திருமகள் இருப்பிடம் தாமரை மலராகையால் தாமரை மலருள்ள இடம் பொறியாலயப் பொய்கை யென்னப்பட்டது.
|
|
|
|