| 9. திருவெங்கைக்கோவை |
|
| வெறியச்சுறுத்தல் |
| |
| |
அலைமேற் கிளர்பொறி வாழ்வெங்கை வாண ரணவரைமேற் சிலைமேற் பயில்கைத் தலத்தைய நீயெமைச் செய்துயர்க்குத் தலைமேற் படுமறிக் கோர்கான் முடக்குந் தகைமையென்னக் கொலைமேற் பயிலு மெமர்வெறி யாடல் குறித்தனரே.
|
(234) |
| |
| பிறர்வரைவுணர்த்தல் |
| |
| |
மகவா னிறைஞ்சுந் திருவெங்கை வாணர் வரையணங்கின் முகவா ரிசமு முலையுங்கண் டான்மிகு மோகமுறுஞ் சகவாழ் வினரை யுரைப்பதென் யான்மறை சாற்றுகின்ற சுகவாம தேவரு மின்றே விடுவர் துறவினையே.
|
(235) |
| |
| வரைவெதிர்வுணர்த்தல் |
| |
| |
கொன்னெறி வேற்கு மரன்போ லெமரெதிர் கொண்டுதரும் நன்னெறி யாற்பெற லாகவுந் தென்வெங்கை நாதர்வெற்ப செந்நெறி யாற்செல் பதிக்கோர் கொடுநெறி செல்பவர்போல் மின்னெறி வேற்கண் ணியைக்கள வாற்பெற வேண்டினையே.
|
(236) |
| |
| வரையுநாளுணர்த்தல் |
| |
| |
பணிவாய் விரிசடைப் பெம்மான்றென் வெங்கைப் பனிவரைமேற் கணிவாய் மலர்ந்து மணநா ளுரைப்பக் கடன்றரக்கிண் கிணிவாய் மலரனை யாண்மறிப் பாயிடுங் கீற்றெனவொண் மணிவாய் புயத்தன்ப வூர்கொண்ட தால்வெண் மதியமுமே.
|
(237) |
| |
| தலைமகளறி வறிவுறுத்தல் |
| |
| |
பிற்பழி யாது மிலரால சுந்தரர் பித்தவெனுஞ் சொற்பழி யாளர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற் றற்பழி யாகநின் றன்பழி நாணித் தலைவவறக் கற்பழி யாது மடமா தெனையுங் கரந்தனளே.
|
(238) |
| |
|
| |
234. கிளர்தல்-தோன்றல். சிலை-வில். பயிலல்-பழகுதல். வெறியாடல்-வேலனாடல். 235. மகவான்-இந்திரன். முகவாரிசம்-முகமாகிய தாமரை. மகவான் என்பதற்குப் பூசிக்கப் படுவோன் என்றும் வேள்வி செய்வோன் என்றும் பொருளுரைப்பர். 236. கொன்-பெருமை; அச்சமெனினுமாம். எறிதல்-வீசுதல். செந்நெறி-நேர்வழி. கொடு நெறி-கோணலாகிய வழி. 237. வாய்-பொருந்திய. கணி-வேங்கை. வாய்மலர்ந்து-வாய் திறந்து. கணி-சோதிடன். மறிப்பு-தடை. கீற்ற-கோடு. ஊர்-பரிவேடம். 238. யாதும்-சிறிதும். அறக்கற்பு-அறத்தோடு கூடிய கற்பு. கரத்தல்-தலைமகன் பிரிவால் பீர்பூத்தல் வளைகழலல் முதலியன புலப்படாவகை மறைத்தல்.
|
|
|
|