1. சோணசைலமாலை |
|
|
வேலையந் துகில்சூழ் மலர்தலை யுலகின் மெய்யினைப் பொய்யெனு மவர்க்கே ஏலவந் தருள்வ தன்றிமெய் யினைமெய் யெனுமெனக் கருள்புரிந் திடாயோ காலநன் குணர்ந்து சினகரம் புகுந்து காண்பரி தெனாதுல கனைத்துஞ் சாலநின் றுழியே கண்டிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(11) |
|
|
மயலினா லழுந்தும் பிறவியா மளற்றை வளர்தரு நின்பெருங் கருணை வெயிலினா லுலர்த்தி யெனதுளக் கமலம் விரிக்குமொண் பரிதிநீ யலையோ பயிலுமா லயமோர் சைலமோர் சைலம் பகைப்புல முருக்குகார் முகமோர் சைலமா துலனா மெனக்கொளுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(12) |
|
|
புலம்பரி துயரங் கழன்றுநின் கழற்கால் புந்தியஞ் சினகரத் திருத்தி நலம்புரி மனிதர் பேரவை தமியே னணுகுவா னருளுநா ளுளதோ வலம்புரி மனிதர் கடலென வொலித்து வளைவுற நடுவண்மந் தரம்போல் தலம்புரி தவத்தி னின்றொளிர் சோண சைலனே கைலைநா யகனே.
|
(13) |
|
|
|
11. வேலையந் துகில்-கடலாடை, சினகரம்-கோவில். மெய்-உடல். ஏல-பொருந்த. சால-மிக. நின்றுழியே-நின்றவிடத்தே. 12. மயல்-மயக்கம். ஆலயம் கைலை; கார்முகம்-மேரு; மாதுலன் இமயம் என்க. அளறு-சேறு. பரிதி-கதிரவன். பகைப்புலம்-பகைவர் ஊர். உருக்கு-அழிக்கும். மாதுலன்-மாமன். 13. புலம்-ஐம்பொறி. கழன்று-நீங்கி. நலம்புரி மனிதர்-வீடுபேற்று விருப்பினையுடையோர்.
|
|
|
|