| 9. திருவெங்கைக்கோவை |
|
| சென்றோனீடலிற் காமமிக்க கழிபடர்கிளவி |
| |
| |
பூளை யணியுஞ் சடையாளர் வெங்கை புரேசர்வெற்பிற் பாளை மணங்கமழ் மாதிருப் பாளெனப் பச்சைமயிற் காளை யனையநங் காதலர் தாமலர்க் கால்வருந்த நாளை வராம லிடம்போய் மறியுநன் னாரைகளே.
|
(257) |
| |
| தலைவியைப்பாங்கி யாற்றுவித்தல் |
| |
| |
பொலம்புரி வார்சடை யார்வெங்கை வாணர் பொருப்பணங்கே கலம்புரி மேனியிற் குங்குமந் தோய்தண் களபமென்ன நலம்புரி காதலர் தம்பதி நோக்கி நடந்தவழி வலம்புரி தோன்று மடிப்பொடி பூசுக வந்தருளே.
|
(258) |
| |
| தலைவன்வந்தமை பாங்கியுணர்த்தல் |
| |
| |
மலையானை மாதுல னென்பார்தம் வெங்கை வரையிடைப்பூஞ் சிலையானை வென்ற வெழிலுடை யார்நஞ் செழும்பதிக்குக் கொலையானை மேற்பசும் பொன்னோடு வந்தனர் கோதைகமழ் முலையானை மேற்பசும் பொன்னொழி வாய்மலர் மொய்குழலே.
|
(259) |
| |
| பாங்கிதலைவனொடு நொந்துவினாதல் |
| |
| |
காரார் மணிமிடற் றெம்மான் றிருவெங்கைக் காரிகைதன் பீரார் நுதலு முடியாக் குழலும் பெருவிழியில் நீரார் நிறைகுட முங்கண்ணு றாமைநன் னீதியென்றோ வாரா தொழிந்தனை நின்கருத் தேதுசொன் மன்னவனே.
|
(260) |
| |
|
| |
257. பூளை-பூளைப்பூ; ஆகுபெயர். பச்சை மயில் என்ற சிறப்பால் காளை முருகனை உணர்த்திற்று 258. பொலம்-பொன். பொலம் புரி வார்சடையென்றதனாற் பொன்னின் மிக்குப் பொலிவதிறைவர் சடையென்றவாறாயிற்று. கலம்-பூண். 259. மலையான்-மலையரையன். பூஞ்சிலையான்-மலர்வில்லையுடையவன். 260. மணி நவமணிக்கும் பொதுவாயினும் காரார் என்ற அடையால் நீலமணிஎனக் கொள்க. காரிகை-ஆகுபெயர். பீர்-பசலைநிறம். நுதல்-நெற்றி பெருவிழியினீரார் நிறைகுடம்-கொங்கை. கண்ணுறாமை-நோக்காமை.
|
|
|
|