| 9. திருவெங்கைக்கோவை |
|
| தலைவன்பாங்கியொடுநொந்துவினாதல் |
| |
| |
அலையா நிலையர் திருவெங்கை வாண ரணிவரையீர் கலையா னிறைமதி வேய்ங்குழல் சோலைக் கருங்குயில்யாழ் மலையா னிலநல்ல வோவல்ல வோவம் மதனனெடுஞ் சிலையா னுமிழ்வ தலரோவம் போவென்ன செப்புமினே.
|
(261) |
| |
| தலைவியையாற்றுவித்திருந்த வருமைசாற்றல் |
| |
| |
நீர்மல்கு கண்ணும் வளைதீர்ந்த கையும்வெந் நெட்டுயிர்ப்பும் பீர்மல்கு கொங்கையு மாய்ப்பின்னை வேறு பிழைப்பிலதாய் ஆர்மல்கு செஞ்சடை யார்வெங்கை வாண ரருளதனால் தார்மல்கு தோளண்ண லேபுரந் தேனின் றனியுயிரே.
|
(262) |
| |
வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல் என்பொருட்பிரிவுணர்த் தேந்திழைக்கென்றல் |
| |
| |
இடைநிலை யாம்பொரு ளுண்டேன் முதனிலை யெய்தறமுங் கடைநிலை யாமின் பமுமேவு மென்றனர் காதலரென் றடைநிலை யாம்பதத் தெம்மான் றிருவெங்கை யாயிழைக்குத் தொடைநிலை வார்குழற் பூங்கொடி யேசென்று சொல்லுகவே.
|
(263) |
| |
| நின்பொருட்பிரிவுரைநீயவட்கென்றல் |
| |
| |
என்னோடு சொல்லுக செல்லாமை யுண்டெனி னீரமதி தன்னோடு மல்கு சடையாளர் வெங்கைத் தடஞ்சிலம்பிற் பொன்னோடு சொல்லுக நீநின் செலவைப் பொருணினைந்து முன்னோடு பின்னு மிழப்பான் கருதிய முன்னவனே.
|
(264) |
| |
|
| |
261. அலையாநிலையர்-சலிக்காத நிலையை உடையவர். கலையால் நிறைமதி-முழுத்திங்கள். வேய்ங்குழல்-மூங்கிற்குழல். இதனைப் புள்ளாங்குழல் என்பர். பொள்ளாங்குழல் என்பது திரிந்தது. பொள்ளல்-தொளைத்தல். 262. வளை-வளையல். மல்கல்-நிறைதல். தீர்தல்-ஒழிதல். பிழைப்பு-உய்வு. புரத்தல்-காத்தல். 263. “வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள், நடுவண தெய்த விருதலையு மெய்தும்” என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. பூங்கொடி-உவமையாகு பெயர். 264. “செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின், வல்வரவு வாழ்வார்க் குரை” என்பது திருக்குறள். முன்-அறம். பின்-இன்பம். பொன்-ஆகுபெயர். முன்னவன்-தலைவன்.
|
|
|
|