| 9. திருவெங்கைக்கோவை |
|
| நீடேனென்றவ னீங்கல் |
| |
| |
மாணிக்க வாசகன் செந்தமிழ் மாலை மணக்குமுடி வேணிக் கடவு ளிடமா கியதிரு வெங்கையன்னாய் ஆணிக் கனக மனையாள் செயலிங் கறிந்துசெல்வேன் பாணிக் குமாறிருந் தாலெனைப் போலிலைப் பாவிகளே.
|
(265) |
| |
| பாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தல் |
| |
| |
இருளா லயமன்ன வார்குழ லாய்நம் மிறைவரின்று வெருளா லமுண்ட திருவெங்கை வாணர்தம் மெல்லடியை அருளா லலதெய்த லாகாத வாறென வானைமிசைப் பொருளா லலதுனை யெய்தவொ ணாதென்று போயினரே.
|
(266) |
| |
| தலைவியிரங்கல் |
| |
| |
பொழியு மருளுடை யார்வெங்கை வாணர் பொருப்பருவி விழியு மெலிவும் பசப்பூர் முலையுமவ் வின்மதனால் அழியு மனமு நினைந்தில ராயினு மாவொருபெண் பழியு நினைந்தில ரேபொருண் மேற்சென்ற பாதகரே.
|
(267) |
| |
| தலைவியைப்பாங்கி கொடுஞ்சொற்சொல்லல் |
| |
| |
அரியா ரறிதற் கரியார் திருவெங்கை யாயிழையாய் பிரியார் பிரியப்பட் டாரிலை யோநின் பெருமணக்குக் கரியார் பொருடரச் சென்றார் பொருட்டுக் கயன்மருட்டும் வரியார்கண் ணீர்மல்க வென்னைகொ லோநின்று மாழ்குவதே.
|
(268) |
| |
|
| |
265. மாணிக்க வாசகன் செந்தமிழ் மாலை-திருவாசகம். முடிவேணி-திருமுடிச்சடை. ஆணிக் கனகம்-உரையாணிக் கிளைக்காத பொன். பாணித்தல்-காலந் தாழ்த்தல். 266. இருள் ஆலயம் அன்னவார்குழலாய்-இருளுக்கிருப்பிடம் போன்ற நீண்ட கூந்தலையுடையவளே. ஆலம்-நஞ்சு. ஆனைமிசைப் பொருள்-யானைச்சுமையாக்கிக் கொணரும் பொருள். 267. இழிதல்-இறங்குதல். பாதகர்-தீவினையை உடையவர். பொருண்மேல்-பொருளீட்டத்தின்மேல். 268. ஆயிழை-அன்மொழித் தொகை. மணத்துக்கு எனற்பாலது அத்துச்சாரியைகுறைந்து மணக்கு என நின்றது. மாழ்கல்-மயங்கல்.
|
|
|
|