| 9. திருவெங்கைக்கோவை |
|
| தலைவி கொடுஞ்சொற் சொல்லல் |
| |
| |
நீடறி வாய்நின்ற வெம்மான் றிருவெங்கை நேரிழையாய் பீடறி வாய்நம் முயிரனை யார்தம் பெரும்பணைநீர் நாடறி வாய்பொரு ணச்சியிப் போது நடந்தகொடுங் காடறி வாய்துணிந் தாயுனைப் போலிலைக் கன்னெஞ்சரே.
|
(269) |
| |
| வருகுவர்மீண்டெனப் பாங்கிவலித்தல் |
| |
| |
வலையிற் படுகலை கண்டிள மான்பிணை மாழ்கிநிற்கும் நிலையிற் படர்வனஞ் சென்றனங் காதலர் நெஞ்சுருகிக் கொலையிற் படுமழு வார்வெங்கை மாதுன் குளிர்தரள மலையிற் படர்தனம் பீர்மீள மீண்டு வருகுவரே.
|
(270) |
| |
| பருவங்கண்டுபெருமகள் புலம்பல் |
| |
| |
பூட்டாத வில்வளைத் தார்த்தாங் கிடித்துப் புயலெழுந்து தீட்டாத வம்பு பொழியுமிக் காலந் தெரிந்திலரோ காட்டாத நன்னிலை யார்வெங்கை வாணர் கனகவெற்பில் ஈட்டாத பொன்னனை யாயகன் றார்பொரு ளீட்டுதற்கே.
|
(271) |
| |
| இகுளைவம் பென்றல் |
| |
| |
வெயிலே யெனமணி கண்டிதழ் கூம்பி விரைக்குவளை துயிலே புரியுஞ் சுனைவெங்கை வாணர் சுடர்க்கிரியின் மயிலே யுளங்கவ லேலிது தான்மழை வம்பொடுங்கிக் குயிலே மருபரு வத்தாற் பொழிதருங் கொண்டலன்றே.
|
(272) |
| |
| இறைமகண் மறுத்தல் |
| |
| |
கொங்கைப் பசப்பெனக் கொன்றைகள் பூத்த குருகொழிந்த அங்கைத் தலமெனத் தோன்றியுந் தோன்றின வன்னவயல் வெங்கைப் பதியிற் பழமலை நாதர் மிடறெனவே மங்கைப் பருவத் தணங்கே முகிலெழும் வம்பலவே.
|
(273) |
| |
|
| |
269. நீடறிவாய்-பேரறிவு வடிவமாய். பீடறிவாய்-பெருமையை அறிவாய். நச்சல்-விரும்பல். 270. கலை-கலைமான். மாழ்கி-மயங்கி. தரளம்-முத்துமாலை. வலை-கண்ணி. படுதல்-அகப்படுதல். படர்வனம்-பெருங்காடு. 271. பூட்டாத வில்-நாண்பூட்டாதவில். ஆர்த்து-முழங்கி. நாண்பூட்டாத வில்-வானவில். தீட்டாத அம்பு-நீர். ஈட்டல்-தேடுதல். 272. வெயிலே யென்னு மேகாரம் தேற்றம். கவலல்-கலங்கல். பருவத்தால்-உருபுமயக்கம். கொண்டல்-முகில். 273. கொங்கை-தனம். பசப்பு-பசலை. குருகு-பறவை. அங்கை-உள்ளங்கை. அழகிய கை யெனினுமாம். தோன்றி-செங்காந்தள். மிடறு-கழுத்து.
|
|
|
|