| 9. திருவெங்கைக்கோவை |
|
| அவர்தூதாகிவந் தடைந்ததிப் பொழுதெனத் துணைவிசாற்றல் |
| |
| |
இணர்வார் சடைமுடி யார்வெங்கை வாண ரிமயவெற்பிற் புணர்வார் முலையிள மென்கொடி யேநம் புலம்புறுநோய் உணர்வார் பொருளொடும் வந்தாரென் றோகை யுரைத்துமுகில் வணர்வார் குழலெழில் வாங்குதல் வேண்டிமுன் வந்ததுவே.
|
(274) |
| |
| தலைமகளாற்றல் |
| |
| |
பொருநாண் மதனை யழித்தே யிமயப் பொருப்பின்மணத் திருநா ளதிற்றரும் வெங்கைபு ரேசர் செழுஞ்சிலம்பிற் கருநாண் மலர்விழி மாதேயென் றாயினுங் காதலரீங் கொருநாள் வருவரென் றேநின்ற தாவி யுடலகத்தே.
|
(275) |
| |
| அவனவட்புலம்பல் |
| |
| |
ஓடுந் தடங்கண் மணற்கேணி யாகவவ் வூற்றிறைக்கும் நீடும் புளின முலையாக் குறைவு நிறைவுமின்றிச் சூடும் பிறையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற் பாடுஞ் சுரும்பலர் மொய்குழ றேம்பிப் பதைத்திடுமே.
|
(276) |
| |
| பாகனொடுசொல்லல் |
| |
| |
வார்கொண்ட மென்முலை யாளிடை யேபோய் வருவலென்னுங் கார்கொண்ட வென்னிடை யில்லைபொய் யென்னக் கடுக்கைநறுந் தார்கொண்ட செஞ்சடை யார்வெங்கை வாணர் தடஞ்சிலம்பிற் றேர்கொண்ட சீர்வல வாவிரைந் தேகச் செலுத்துகவே.
|
(277) |
| |
| மேகத்தொடு சொல்லல் |
| |
| |
சென்னிப் பிறையர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பில் மன்னிப் படருங் கொடிபோற் றழைத்து மலர்வதன்றெங் கன்னிப் பசுங்கொடி வாடுங்கண் டீர்மெய் கருகிநின்று மின்னிப் பொழியி லெனையன்று போய்க்கரு மேகங்களே.
|
(278) |
| |
|
| |
274. இணர்-பூங்கொத்து. வார்-நீண்ட. புணர்-நெருங்கின. ஓகை-உவகை. புலம்பு-துன்பம். வாங்குதல்-பெறுதல். 275. பொருதல்-போர் செய்தல். அழித்தல்-நீறுபடுத்தல். தருதல்-படைத்தல். உடலகத்து-உடம்பினுள்ளே. 276. ஓடுதல்-காதளவோடுதல். தடங்கண்-விசாலமாகிய கண். புளினம்-மணற்றிடர். தேம்புதல்-வாடல். பதைத்தல்-துடித்தல். 277. வார்கொண்ட மென்முலையாள் என்றது தலைவியை. இடை-மருங்குல். கடுக்கை-ஆகுபெயர். செலுத்துக-வியங்கோள். 278. மன்னி-நிலைபெற்று. மெய்கருகி நின்று-உடல்கறுத்துநின்ற.
|
|
|
|