| 9. திருவெங்கைக்கோவை |
|
| கையறுதோழி கண்ணீர்துடைத்தல் |
| |
| |
கோலம் புனைதலிற் குற்றமின் றான்மலர் கொய்துவருங் காலந் தவறில பந்திடைத் தோல்வியுங் கண்டிலமால் ஆலந் திகழ்மிடற் றார்வெங்கை நாட்டுன தம்புயத்தில் நீலஞ் சிறுமுத் துதிர்ப்பதென் னோவுரை நேரிழையே.
|
(291) |
| |
| தலைமகள்கலுழ்தற் காரணங்கூறல் |
| |
| |
தெண்ணீர் முடியர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற் பண்ணீர்மை மென்மொழிப் பாவைநல் லாயிப் படிமுழுதும் எண்ணீர்மை யன்பரைக் கண்டன மால்வந்த தென்றெனது கண்ணீர் கொடுமென் முலைமேற் பசப்பைக் கழுவுறவே.
|
(292) |
| |
| தலைவன்தெய்வங்காட்டித் தெளிப்பத் தெளிந்தமைகூறல் |
| |
| |
கொலைசூழ் குருகுமொன் றுண்டாற் கரிநெறு கூறுமெனில் இலைசூழ் மனையின் முனிவரெல் லாந்தொழு மெங்கள்பழ மலைசூழ் மறுகெழில் வெங்கைநன் னாடர் மனந்தெளியச் சிலைசூழ் வனந்திகழ் தெய்வதங் காட்டித் தெளித்ததற்கே.
|
(293) |
| |
| பாங்கி யியற்பழித்தல் |
| |
| |
முனங்குழை யாத மலைகுழைத் தார்தம் முதல்விகன தனங்குழை யாது குழைந்தார்தம் வெங்கைத் தடஞ்சிலம்பிற் கனங்குழை யாயுனக் கீந்தா ரிலைகொனங் காவலனார் மனங்குழை யாமன் முனந்தா மருந்து மருந்தினையே.
|
(294) |
| |
|
| |
291. கோலம் புனைதல்-தலைப்பணி திருத்தல் முதலிய அழகு செய்தல். பந்து-பந்தாட்டம். தோல்வி-தோற்றல். ஆலாலம்-பாற்கடலில் தோன்றிய நஞ்சு. 292. பண்ணீர்மை-பண்ணின் குணம்; அஃதாவது இனிமை. பாவை-பொம்மை. கழுவுற-கழுவ 293. இலைசூழ்மனை-பர்ணசாலை. பர்ணம்-இலை. இதனை இலைக்குடில் என்பர். மறுகு-தெரு. வனந்திகழ் தெய்வதம்-வனதேவதை. தெளித்தல்-தேற்றுதல். கொலைசூழ்தல்-கொன்றுண்டல். 294. குழையாமை மலைக்கியல் யென்பது தோன்றக் குழையாத மலையென்றார். மலை யிங்கு மேருமலையைக் குறித்தது. கனதனம்-பெருங்கொங்கை.
|
|
|
|