| 9. திருவெங்கைக்கோவை |
|
உடன்போக்கு பாங்கி தலைவற்குடன்போக்குணர்த்தல் |
| |
| |
தாயிற் சிறந்த திருவெங்கை வாணர் தடஞ்சிலம்ப போயிப் பொழுது வருவலென் றேகிற் பொறுக்கறியாள் தீயிற் புழுவென வேபதைப் பாணின் றிருவருளால் நீயித் திருவை யுடன்கொடு போநின் நெடுநகர்க்கே.
|
(309) |
| |
| தலைவ னுடன்போக்குமறுத்தல் |
| |
| |
அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத ரடிமலர்க்குச் சனித்த நெருஞ்சிப் பழமென் றறிந்துந் தகுவரன்றி மனித்தர் வழங்கரும் வெங்கொடும் பாலை வழியொருநான் இனித்த மொழியுடை யாரையெவ் வாறுகொண் டேகுவனே.
|
(310) |
| |
| பாங்கி போக்குடன்படுத்தல் |
| |
| |
துணையிற் புணர்களி வண்டிளம் பூந்தண் டுணர்பொதுளும் பணையிற் றுயில்பொழில் வெங்கைபு ரேசர் பனிவரையாய் பிணையிற் பிறழ்கருங் கண்ணாட்கு நின்னைப் பிரிந்தமலர் அணையிற் கொடியது வோவைய நீசெல் லழற்சுரமே.
|
(311) |
| |
| தலைவன் போக்குடன்படுதல் |
| |
| |
நாமொழி யாது புகழ்வா னருள்வெங்கை நாதரைச்சொற் பாமொழி யானெய்த லாம்பாலை ஞானசம் பந்தனுக்குத் தேமொழி யாயுன் னுயிரனை யாட்கருஞ் செம்பவள வாய்மொழி யாளிளங் காவாகும் பட்ட மரங்களுமே.
|
(312) |
| |
|
| |
309.09. சிலம்பன்-மலைநாடன். பதைத்தல்-துடித்தல். திருதிருவைப் போல்வாள்; உவமையாகு பெயர். 310.10. “அனிச்சமு மன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்பது திருக்குறள். அனிச்சம்-அனிச்சமலர். அன்னத்தூவி-அன்னத்தின் மெல்லிய சிறகு. ஈற்றேகாரம்-இரங்கல். இனித்த மொழி-இன்சொல். 311.11. பொதுளும்-நிறைந்த. பனிவரை-குளிர்ந்த மலை. பிணை-பெண்மான். பிறழ் பிறழ்கின்ற. 312.12. புகழ்வான்-புகழ. பாமொழி-தேவாரத்திருப்பதிகம். பாலைநெய்தலாகப் பாடியது. திருநனி பள்ளியில்; தேமொழியாய் என்றது பாங்கியை.
|
|
|
|