| 9. திருவெங்கைக்கோவை |
|
| கண்டோர் தம்பதி யணிமைசாற்றல் |
| |
| |
பணியே றியசெஞ் சடைவெங்கை வாணர் பனிவரைமேல் கணியேறு மாவிற் படர்கொடி மீது கழனிவளை அணியேறு வேழம்பர் போலே தவழு மணிநகரம் மணியேறு தோளண்ண லேயுங்கண் மாட வளநகரே.
|
(326) |
| |
| தலைவன் தன்பதியடைந்தமை தலைவிக்குணர்த்தல் |
| |
| |
பன்னகர் கின்னர மன்னவ ரென்றும் பரவுவெங்கை நன்னகர் தன்னக ரென்னுமெம் மான்கிரி நன்னுதலாய் பொன்னக ரென்னக ரிந்நகர் முன்னெனப் போற்றலுறும் இந்நக ரென்னகர் நின்னக ராக வெழுந்தருளே.
|
(327) |
| |
| செவிலிபாங்கி யைவினாதல் |
| |
| |
சொன்மாது தன்புகழ் யாழிலிட் டேத்தித் தொழுமிமய நன்மாது பங்கர் திருவெங்கை வாணர்நன் னாடனையாய் என்மாது சென்ற விடமே தறிந்தில னின்முழுதும் பொன்மாது சென்ற மனைபோற் பொலிவறப் புல்லென்றதே.
|
(328) |
| |
| பாங்கி செவிலிக்குணர்த்தல் |
| |
| |
சாந்தந் தருபவர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில் சேந்தங் கயல்விழி நீர்மல்க வேநின்று தேம்புமன்னே காந்தந் தொடர்கரும் பொன்போல வின்றுதன் காந்தனைக்கண் டேந்தங் கலமுலைச் செம்பொனன் னாடொடர்ந் தேகினளே.
|
(329) |
| |
| செவிலி யினையலென்போர்க் கெதிரழிந்துமொழிதல் |
| |
| |
அனையே யனைய வருளாளர் வெங்கை யணிவரைமேல் இனையே லெனவெனக் கோதிநிற் பீரெனைப் போலவொரு புனையே டவிழ்மலர்க் கோதையைப் பாலையிற் போக்கிநின்றால் வினையே னுறுதுய ரெல்லா முமக்க வெளிப்படுமே.
|
(330) |
| |
|
| |
326.26. பணி-பணத்தையுடையது பாம்பு. பணம்-பாம்பின்படம். கணி-வேங்கைமரம். வேழம்பர்-கழைக்கூத்தர். 327.27. பன்னகர்-பாம்பு வடிவமுடைய ஒரு தேவசாதியார். பரவு-வழிபடுகின்ற. 328.28. சொல்மாது-கலைமகள். பொன்மாது-திருமகள். பொலிவு-விளக்கம். புல்லெனல்-ஒளிமழுங்கல். 329.29. சாந்தம்-மௌனநிலை. சேந்து என்பதற்குப் பகுதி செம்மை. மல்கல்-தளும்பல். தேம்புதல்-அழுதல். கரும்பொன்-இரும்பு. காந்தன்-கணவன். செம்பொன்-திருமகள். 330.30. இனைதல்-வருந்துதல். புனையேடவிழ் மலர்க் கோதை-பெண். பாலை-கடுஞ்சுரம்.
|
|
|
|