| 9. திருவெங்கைக்கோவை |
|
| செவிலி தன்னறிவின்மை தன்னைநொந்துரைத்தல் |
| |
| |
புன்றோ லுடையர் திருவெங்கை வாணர் பொருப்பணங்கு வன்றோ ளிராம னொடுசீதை தங்கண் மனைகடந்து சென்றோர் வனம்புகுந் தாளென்பர் மாசி றெரிவையர்க்கு நன்றோ வதுபிழை தானோவென் றாளது நாடிலனே.
|
(331) |
| |
| செவிலி தெய்வம்வாழ்த்தல் |
| |
| |
செடிமுழு தும்புலி துஞ்சுபொல் லாதவெந் தீச்சுரத்தில் அடிமுழு துஞ்செம் புனல்பாயச் சென்ற வணங்குவந்தால் படிமுழு தும்புகழ் வெங்கைபு ரேசர்தம் பாலனுக்கெங் குடிமுழு துந்தொழும் பாளாக வோலை கொடுக்குதுமே.
|
(332) |
| |
| செவிலி நற்றாய்க்கறத்தொடுநிற்றல் |
| |
| |
வேலைத் தரளமு மைந்தலை நாக வியன்மணியுஞ் சோலைச் செழுமல ரும்போல நம்மைத் துறந்துமெல்ல மாலைக் குழலி தனக்குரி யானை மணந்துசென்றாள் பாலைப் பொருமொழி பங்கர்வெங் கேசர் பனிவரைக்கே.
|
(333) |
| |
| நற்றா யயலார்தம்மொடு புலம்பல் |
| |
| |
பொன்போ லொருபெண் டிருவெங்கை யானருள் பூண்டுபெற்றோர் என்போ லிலையுல கம்பதி னான்கினு மிப்பொழுது துன்போ டழுங்கு மவருமென் போலிலைச் சோகமுறேல் என்போ ரறிகுவ ரோவறி யாரிவ் விரண்டையுமே.
|
(334) |
| |
| நற்றாய் தலைமகள் பயிலிடந் தம்மொடுபுலம்பல் |
| |
| |
ஆவிக் குரியர் திருவெங்கை வாண ரணிவரைமேல் மேவிக் குடையுஞ் சுனையே மலர்கொய்யு மென்பொழிலே வாவிக் குமுத மலர்வாய் சிறிது மலர்ந்துபெற்ற பாவிக் குரையுமென் றென்சொல்லிப் போயினள் பாதகியே.
|
(335) |
| |
|
| |
331.31. புன்தோல்-இழிந்த தோல். நாடல்-ஆராய்தல். 332.32. படிமுழுதும்-உலகம் முழுவதும். செடி-சிறுதூறு. துஞ்சல்-உறங்கல். செம்புனல்-உதிரம். தொழும்பு-அடிமை. 333.33. வேலை-கடல். தரளம்-முத்து. வியல், வியன் இரண்டற்கும் பொருள் வேறுபாடின்று. மணத்தல்-கூடல். பாலைப்பொருமொழி-பாலை நிகர்த்த மொழியினையுடையாள். 334.34. அழுங்கல்-வருந்தல். சோகம்-துக்கம். இவ்விரண்டையும் என்றது இவளைப் பெற்ற பொழுதின் மகிழ்ச்சியும் இழந்தபொழுதில் துக்கமும் எனக் கொள்க. 335.35. ஆவி-உயிர்கள். குடைதல்-மூழ்குதல். பொழில்-சோலை. வாவி-தடாகம். குமுதம்-செவ்வல்லி மலர். பாதகி யென்றது தலைவியை.
|
|
|
|