1. சோணசைலமாலை |
|
|
இந்தியங் கரண முடலமவே றாக்கி யிருண்மலப் படலமுங் கீறிக் கந்தமு மலரு மெனநினை யென்னிற் காண்பறக் காணுநா ளுளதோ வந்தொரு களிறு முழுவையுங் கொன்ற மலிபகை தவிர்ப்பவெண் ணிகந்த தந்தியும் புலியும் வளர்த்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(17) |
|
|
முழங்குவண் டினங்கள் விருந்துணு மலங்கன் மொய்குழன் மகளிர்தம் மயலாற் புழுங்குமென் றனைநின் றிருவடி நிழலிற் புகவிடுத் தளிக்குநா ளுளதோ வழங்குவெண் டிரையா றவிர்சடை கரப்ப மணிமுடி நின்றிழிந் திடல்போல் தழங்குவெள் ளருவி யிழிந்தொளிர் சோண சைலனே கைலைநா யகனே.
|
(18) |
|
|
குன்றுதோ றாடுங் குமரனே யெனவுங் கொடுஞ்சிலை மதனவே ளெனவும் புன்றொழின் மனிதர்ப் புகழ்ந்துபாழ்க் கிறைக்கும் புலமைதீர்த் தெனக்கருள் புரியாய் ஒன்றொரு தினந்தோட் குட்குழைந் தனமென் றுறாதுநா டொறுமக மேரு தன்றலை தாழ்ப்ப வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(19) |
|
|
|
17. கந்தம் சிவத்திற்கும், மலர் ஆன்மாவிற்கும் ஒப்பு. வந்த என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது. உழுவை-புலி. தந்தி-யானை. காண்பற-இடைவிடாது. 18. சடை மறையாநிற்க அச்சடைக் கங்கைதான் மறையாது இழிதல்போல அருவியழியும் என்பது.அலங்கல்-மாலை. புழுங்கும்-வருந்தும். கரப்ப-மறைக்க. தழங்கு. ஒலிக்கின்ற. 19. ஒன்று-ஒரு தினம்; முப்புரஞ் சுட்ட நாள்- தோள்-புயம், கை. குழைதல்-வில்லாக வளைதல்.
|
|
|
|