| 9. திருவெங்கைக்கோவை |
|
| அச்சத்தன்மைக் கச்சமுற்றிரங்கல் |
| |
| |
ஆல மெழும்பொழு தவ்வெங்கை வாணர்க் கபயமென ஓல மிடுஞ்சுரர் போலே யபயமென் றோடுங்கொலோ ஞால மிடந்து திரிந்தவக் கோலமு நாணவொரு கோல மெழும்பொழு தஞ்சிமுன் போந்த கொழுநனுக்கே.
|
(340) |
| |
| கண்டோரிரக்கம் |
| |
| |
துன்படு மையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேல் மின்படு நுண்ணிடை யாள்விளை யாடிய மென்பொழிலும் பொன்படு மூசலும் வண்டலம் பாவையும் பூவையுங்கண் டென்படு மோவறி யேம்பெற்ற தாயென் றிருப்பவளே.
|
(341) |
| |
| செவிலியாற்றாத்தாயைத் தேற்றல் |
| |
| |
வெல்லப் படாத வயில்விழி யாள்செயல் வேறொன்றன்றிச் சொல்லப் படாத செயலாய் முடியிற் றுயர்தனன்றோ அல்லற் படாதியன் னேவெங்கை வாண ரருள்கொடுநான் செல்லப் படாத விடமேனுஞ் சென்று திருப்புவனே.
|
(342) |
| |
| ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல் |
| |
| |
தன்னைத் தலைவனை நின்றாங் கறிந்து தவம்புணர்ந்து முன்னைப் பவந்தொலைத் தீருண்மை கூறுமின் மூரிவெள்ளம் மின்னைப் பொருசெஞ் சடையில்வைத் தார்வெங்கை வெற்பிலெங்கள் பொன்னைக் கரந்தொரு காளைகொண் டேதனி போயினனே.
|
(343) |
| |
|
| |
340. ஆலம்-பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சு. ஓலமிடல்-முறையிடல். சுரர்-தேவர். ஞாலம்-பூமி. இடத்தில்-பிளத்தல். கோலம்-பன்றி. கொழுநன்-கணவன். 341. துன்பு-துன்பம், (பிறவித்துன்பம்) மின்படும் என்பதில் படும் உவமஉருபு. பூவை-நாகணவாய்ப்புள். 342. அயில்-வேல் வெல்லப்படாத அயில் விழியாள் என்றது தலைவியை. துயர்தல்-துக்கித்தல். அல்லற்படல்-துன்பப்படல். திருப்புதல்-மீட்டல். 343.3, மூரிவெள்ளம்-பெருவெள்ளம். பொருதல்-நிகர்த்தல். பொன்-திருமகள். முக்கோற் பகவர்-மூன்று கோல்களையுடைய துறவிகள்.
|
|
|
|