| 9. திருவெங்கைக்கோவை |
|
| தீங்குங்கிழத்தி பாங்கியர்தமக்குத் தன் செலவுணர்த்தல் |
| |
| |
வெறிமேவு கொன்றையம் பூந்தொடை யார்திரு வெங்கைவெற்பில் கறிமேவு முப்பென வன்பரிற் கூடிவெங் கானகத்தில் நெறிமேவு மங்கை மகிழ்ந்துசென் றாளென நீருரைமின் மறிமேவு முண்கண் மடக்கொடி மாதர்க்கு மாதவரே.
|
(362) |
| |
| தலைமகடன் செலவீன்றாட்குணர்த்தல் |
| |
| |
மின்னைத் திருத்து மவிர்சடை யார்திரு வெங்கைவெற்பில் பொன்னைப் பரித்த திருமார்ப ரோடதர் போயினளென் றென்னைக் கொடுத்துக் கலங்கவிழ் நாய்க னெனக்கவலும் அன்னைக் குரைத்தரு ளீர்வழு வாநெறி யந்தணரே.
|
(363) |
| |
| நற்றாய்க்கந்தணர் மொழிதல் |
| |
| |
அல்லஞ்சு கண்டர் திருவெங்கை வாண ரணிவரையீர் இல்லஞ் சுரமச் சுரமேதன் னில்ல மெனக்கருதி வல்லஞ்சு மென்முலை யாணடந் தாளென் வழிச்செலவைச் சொல்லந் தணவனைக் கென்றுவெம் பாலைச் சுரத்திடையே.
|
(364) |
| |
| நற்றாயறத்தொடு நிற்றலிற்றமர்பின் சேறலைத் தலைவிகண்டு தலைவற் குணர்த்தல் |
| |
| |
கல்வளைத் தன்று புரமெரித் தார்கருங் காவியங்கட் பல்வளைச் செங்கைக் கொடிபாகர் வெங்கைப் பனிவரையாய் வில்வளைத் தம்பு பொழிந்தார்த் தெழுந்து வியன்சிலம்பைச் செல்வளைப் புற்றது போல்வளைந் தாரெமர் தேரினையே.
|
(365) |
| |
|
| |
362. வெறிமேவு-மணம் பொருந்திய. வெங்கானகம்-பாலை நிலம். நெறி-கற்புநெறி. மறி-மான். உண்கண்-மையுண்டகன். 363. மின்னைத்திருத்தலாவது-மின் விளங்குமாறு செய்தல். பரித்தல்-தாங்குதல். அதர்-அருநெறி. கலம்-மரக்கலம். நாய்கர்-வணிகர். கவலல்-துன்புறல். வழுவாநெறி-துறவறநெறி 364. அல்லஞ்சு கண்டர்-இருளும் அஞ்சுமாறு மிகக் கறுத்த கண்டத்தையுடையவர். வல்-சூதாடு கருவி. 365. கல்-மேருமலை. இறைவர் வளைத்தது பொன்மலையாயினும் சாதியொப்புமை கருதிக் கல் என்றார். செல்-முகில்கள். வில் வளைத்து-வானவில்லை வளைத்து.
|
|
|
|