| 9. திருவெங்கைக்கோவை |
|
கற்பியல் இல்வாழ்க்கை தலைவன் றலைவிமுன்பாங்கியைப் புகழ்தல் |
| |
| |
கலைகா ணரும்புகழ் வெங்கைபு ரேசர் கனகவெற்பில் குலைகா ணலைபுனற் பண்ணையி னாக்குபைங் கூழ்விளைவுற் றுலைகா ணளவும் வருந்துகின் றாரினென் னொண்டொடைமின் முலைகா ணளவும் வருந்தினை வாழி முகிண்முலையே.
|
(369) |
| |
| தலைவனைப் பாங்கி வாழ்த்தல் |
| |
| |
மால்போ லிருக்கு மிறைநீ யணிந்தநன் மங்கலநாண் பால்போ லிருக்கு மொழியாட்கு வெங்கைப் பரனணிந்த சேல்போ லிருக்கும் விழிமா துமையின் றிருக்கழுத்தின் நூல்போ லிருக்கப் பெறுகதின் மாதவ நோக்கடைந்தே.
|
(370) |
| |
| பாங்கி தலைவியை வரையுநாளளவும் வருந்தாதிருந்தமை யுரையாயென்றல் |
| |
| |
போற்றலர் போற்றுங் கதிர்வே லவன்றொடை பூணளவும் நீற்றலர் மேனியர் வெங்கையி லேயுண் ணிரம்புசெந்தேன் ஊற்றல ரொன்றிற் கொடிநுசுப் பாயிவ் வுலகநிறை தூற்றல ரெங்ஙன நீசுமந் தாற்றினை சொல்லுகவே.
|
(371) |
| |
|
| |
369. இறை: வனுடைய புகழ் கலைகளால் அளவிடற்கரியதாகலின் கலைகாணரும் புகழ் என்றார். கனகம்-பொன். குலை-கொத்து. பண்ணை-வயல். 370. இறை பண்பாகு பெயர். அண்மைவிளியாதலின் இயல்பாயிற்று அணிதல்-பூட்டுதல். பால் போலிருக்கு மொழி-இன்மொழி. பரன்-மேலானவன்.மாதவன்-திருமகள் கொழுநன். 371. போற்றலர்-விரும்பாதவர். நீறு-திருவெண்ணீறு. ஊற்றுதல்-வார்த்தல். அலர்-மலர், பழிச்சொல். கொடி-பூங்கொடி. நுசுப்பு இடை.
|
|
|
|