9. திருவெங்கைக்கோவை |
|
தலைமகள் கார்ப்பருவங்கண்டுவருந்தல் |
|
|
சிலையோடு வந்தன வென்செய்கு வேன்முகில் செங்கமலன் தலையோடு கொண்டவர் வெங்கையி லேசெந் தமிழ்முதலாங் கலையோது வான்விழைந் துற்றார்க்கக் கல்விக் கடலதனுள் இலையோவொன் றேனு மருள்வேண்டு மென்ன விசைப்பதுவே.
|
(410) |
|
பாங்கியாற்றுவித்தல் |
|
|
என்போ டரவணி யெம்மான் றிருவெங்கை யேந்திழையாய் நின்போ தகமன்ன மன்னவர் நாமின்றி நீகளிப்பத் துன்போடு கல்விக் கடன்மேய்த்து செய்யுளஞ் சோனைபெய்து தன்போல் தருவரென் றேவந்த தாலிச் சலதரமே.
|
(411) |
|
காவற்பிரிவு காவற்குப்பிரிவு தலைமகன்றன்னாலுணர்ந்த தோழி தலைமகட்குணர்த்தல் |
|
|
கருமா முகிலுறங் குஞ்சோலை வெங்கைக் கடவுண்முக்கட் பெருமா டொழிலை யொருநீ பெறினும் பெறுகவென்றே ஒருமா நிலந்தனி னம்முயிர்க் காவல ரோங்குபுகழ்த் திருமா றொழில்வை குதுமென்று போயினர் தேமொழியே.
|
(412) |
|
தலைமகள் கூதிர்ப்பருவங்கண்டு வருந்தல் |
|
|
கணையிலை வேலெனுங் கண்மாது பங்கர் கருப்பவில்லிற் கிணையிலை யென்னுங் திருவெங்கை நாட்டி லிறைவரின்றோ அணையிலை யென்செய்கு வேன்முறை யோவென் றரற்றுகினுந் துணையிலை யென்பது கொண்டோவிவ் வாடை துயர்செய்வதே.
|
(413) |
|
தோழியாற்றுவித்தல் |
|
|
பனிபொரு செஞ்சுட ரன்னார் திருவெங்கைப் பாவைநல்லாய் முனிபொரு விந்த மெனவே கணவர்தம் முன்புரத்தில் கனிபொரு மெல்லிதழ் நன்மாதர் கொங்கை கரந்திடப்பன் நுனிபொரு காலம் வரக்கா தலர்நமை நோக்குவரே.
|
(414) |
|
|
|
410.10. சிலை-வானவில். தலையோடு-கபாலம். விழைதல்-விரும்புதல். இசைத்தல்-சொல்லுதல். 411.11. என்பு : ஆகுபெயர். போதகம்-யானை; யானைக் கன்றெனினுமாம். சோனை-விடாமழை. 412.12. கருமாமுகில் உறங்குஞ்சோலை என்றபடியால் சோலையின் உயர்ச்சி தோன்றிற்று. பெருமான்-பெருமையை உடையவன். 413.13. பங்கர் எனமேல் வருதலால். கணையிலை வேலெனுங் கண்மாது உமாதேவியைக் குறித்தது. அரற்றல்-பேரிரைச்சலிடல். வாடை-வடகாற்று. 414.14. பாவை-பொம்மை வடிவம். நல்லாய்-பெண்ணே. முனி-அகத்தியமுனி. உரம்-மார்பு. கனி-கோவைக்கனி. இதழ்-அதரம். கரத்தல்-மறைத்தல்.
|
|
|
|