10. திருவெங்கைக் கலம்பகம் |
|
|
எழிலிகண் படுக்கும் பொழில்புடை சூழ்ந்த வெங்கையம் பதிவா ழெங்க ணாயக பழமலை நாதநிற் பரவுவன் விசும்பின் அரையனுக் கரைய னாகுமந் நிலையும் நினைகிலன் றமியே னின்னடி யவர்கட் கென்று மடியவ னாகும் ஒன்றொரு வரமு முதவுதி யெனவே.
|
(1) |
|
நேரிசைவெண்பா |
|
|
எவ்வா றளித்த திமையப் புதுமலைதன் ஓவ்வா விளமை யொருமகளை - அவ்வான் பரவுதிரு வெங்கைப் பழமலையே நிற்கு விரவுகிளை யோடும் விழைந்து.
|
(2) |
|
கட்டளைக்கலித்துறை |
|
|
விழக்க மலங்களை மோதிவல் வாளை வியன்படுகர் உழக்க மலங்களை போய்ப்புகும் வெங்கை யொருவவிண்ணோர் தொழக்க மலங்களை மாமதி வேணி சுமந்தருள்வோய் பழக்க மலங்களை யான்பவ வேரைப் பறிப்பதற்கே.
|
(3) |
|
|
|
1. எழிலி-முகில்கள். விசும்பின் அரையன்-தேவர் கோமான். ஒன்று-பொருந்திய.2. ஒவ்வா-ஒப்பற்ற. வான்பரவு-விண்ணவர் போற்றுகிற. விரவு-சூழ்ந்த. கிளை-உறவினர். விழைந்து-விரும்பி. 3. வியன்படுகர்-ஆழ்ந்த குளங்கள். மலங்கு-விலாங்குமீன். அளை-சேறு. கமலம்-நீர். பழக்க மலங்களை-பழக்கமாகவுள்ள. மும்மலங்களை. பவவேர்-பிறவிவேர்.
|
|
|
|