1. சோணசைலமாலை |
|
|
பாயும்வெண் டிரைப்பே ராழிசூ ழுலகிற் பழமொழி யொழியமெய் யடியார் ஆயுமென் மலரோர் மலையள வணிய வமர்ந்தநின் கோலம்யான் மறவேன் தூயவெண் மதியிற் களங்கமென் றுரைப்பச் சூழ்பசுங் கொடிபயி லுருவச் சாயைசென் றுறநின் றிலங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(30) |
|
|
நடமிடு பசும்பொற் புரவிமேற் கொண்டு நளினமென் மலர்க்கரத் தெறிபூம் படையொடு துரந்து வந்துமென் விடயப் பகைப்புலி தனையெறிந் திலையே அடிநடு நிழல்சென் றெழுகட லடைய வகல்பெரும் புறத்துவா ரிதியில் தடமுடி நிழல்சென் றுறவளர் சோண சைலனே கைலைநா யகனே.
|
(31) |
|
|
|
30. பழமொழியாவது-மலையளவு சுவாமிக்குத் தினையளவு புட்பம் என்பது. அம்மொழியகல மலையளவாயுள்ள இக் கடவுளுக்குப் பல மலையளவாகவே மலர்களைச் சாத்துவரென அடியவரது புட்பப் பணியின் மிகுதி குறித்தபடி. மதியில் சாயையுற என்க. 31. குதிரை வீரராதல் உமக்கியற்கையேயாகவும் அங்ஙனமே ஆரோகணித்து வந்தும் எறிந்தீரில்லை; இனியேனும் எறிவீராகவென்பது.
|
|
|
|