1. சோணசைலமாலை |
|
|
யாவுமா முமையுண் ணாமுலை முலைப்பா லீந்துபா டச்செயா யெனினும் மேவுமா துயர்செய் சூலைநோ யெனினும் விடுத்துநிற் பாடுமா றருளாய் ஓவுமா னலது தொல்லுருக் கொளின்வே றொன்றெடுத் திடுமென நினைந்து தாவுமா னினமெண் ணிகந்தசூழ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(32) |
|
|
விருப்பொடு வெறுப்பு மகன்றுபே ரின்ப வெள்ளத்து ளழுந்துநின் னடியார் திருப்பத மிறைஞ்சி யவர்க்குவே ளாண்மை செய்பெருஞ் செல்வமே யருளாய் பொருப்புக டொறும்வீழ் பொங்குவெள் ளருவி போன்றறி விலர்க்கிடை யறாமல் தரிப்பருங் கருணை பொழிதருஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(33) |
|
|
பொங்குறு கவினுங் கற்பும்வாய்ந் திலங்கு புண்ணிய மடந்தையும் பொருளும் இங்குநன் குதவி யங்குவான் கதியி னிருத்துநிற் புலவரென் புகழார் துங்கவெங் குறவர் புனத்திடு பரண்கா றுணித்துநட் டாரமீ மிசைமா தங்கவெண் மருப்புப் பரப்புறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(34) |
|
|
போழ்ந்திடு வடுக்கண் மகளிரை யணைத்துப் புகழ்நந்தி பிரம்படிக் கொதுங்கிச் சூழ்ந்திடு மமரர் நெருங்குசந் நிதியிற் றொண்டனேன் வரவருள் புரியாய் வாழ்ந்திடு மகக்கண் டுருகுதாய் முலைப்பால் வழிந்தொழு குதலென வடியார் தாழ்ந்தெழ வருவி யொழுகுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(35) |
|
|
|
32. ஓவுமான்-இம் மலைவடிவில் ஏந்தப்படாது தவிர்ந்தமான்; தொல்லுரு-பழைய சகளவடிவு. காத்தமை குறித்து நம்மையே தாங்குவரென மானினஞ் சூழ்ந்தன வென்பது. 33. வேளாண்மை-உதவி. மலைக்கணின்று அருவிகள் ஓடி உலகைப்புரப்பதுபோல, அருவியாகிய கருணை பொழிந்து அறிவிலரையுங் காப்பன் என்பது. பொருப்புகள்-மலைகள். 34. ஆரந்துணித்துக் கால்நட்டு எனஇயையும், ஆரம்-சந்தனமரம். மீமிசை-மேல். மீமிசை-ஒருபொருட் பன்மொழி. வான்கதி என்பது சிறந்த வழி. அது முத்திநிலையுமாம். கவின்-அழகு. அங்கு-மறுமையில். 35. மகளிரை யணைத்தல்-கூட்ட மிகுதியால் தம் மனைவிமார்க்கு ஊறு நேராமைப்பொருட்டு. மக-மகவு. தாய் மாட்டு அன்பின் சின்னமாக முலைப்பா லொழுகுதல்போல ஈண்டுஅருண்மிகுதிச் சின்னமாக அருவியொழுகும் என்க. போழ்ந்திடுவடு-பிளந்த மாவடு.
|
|
|
|