1. சோணசைலமாலை |
|
|
நேர்ந்திடு மொருசெங் கோல்கொடு கொடுங்கோ னிமிர்ந்திட விலங்கைசென் றடைந்தோன் கூர்ந்தவன் பொடுநின் றிறைஞ்சுபு வழுத்துங் குரைகழ லிரக்கவஞ் சுவல்யான் சேர்ந்திடு மலைமான் பெருமுலை யுவமை சிறுமலை களுக்குத வாமற் சார்ந்திட விரும்பி வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(36) |
|
|
தெருமரும் பிறவி தமையகன் றிடாத தேவரைத் தேவரென் றெண்ணி அருமருந் தனைய நினையடை யாத வறிவிலார் பவப்பிணி யறுமோ கரிமருங் கணைந்த தெனமுழை வாயிற் கார்வர விரைந்தெழுந் துகள்கே சரிமறைந் திருந்து நாணுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(37) |
|
|
ஆண்டுகம் பலசென் றிடவிருந் திடினு மன்றியோ ரிமைப்பினி லுடலம் மாண்டுகு மெனினு நன்றுநின் கமல மலரடிக் கன்பரா யிருப்பிற் பூண்டயங் கயில்வேற் குதலையந் தீஞ்சொற் புதல்வன்மே லிவர்செய லெனமார்த் தாண்டவன்வந் திவர விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(38) |
|
|
|
36. செங்கோலாகவென்பார் கொடுங்கோனிமிர்ந்திடவென்றார். செங்கோல் கொடுங்கோலென்பவை நீதி அநீதி மேலன. நிமிர்தல்-செவ்விதாதல். கழல்-ஆகுபெயர். இலங்கை சென்றடைந்தோன்-திருமால் கூர்ந்த-பொருந்திய. 37. தெருமரும்-அச்சந்தரக் கூடிய; உகள்-துள்ளி. பவப் பிணி-பிறவி நோய்; அச்சந் தரக்கூடிய பிறவிநோயை அறுக்காத தேவர்களை இறைவனாகக் கருதுபவர்கள் அறிவிலராவர். இறைவற்குப் பிறவிப் பிணி இல்லை என்பது. அருமருந்து-அமுதம். கரி-யானை. கார்-முகில். 38. திருவடிப்பத்தி சித்தித்தவர் சிவகதி பெற்றவரேயாகலின் அவருடலம் பன்னாளிருப்பினும் அன்றிச் சின்னாளிலொழியினும் அது பற்றிக் கவலையின்றென்பது. உகும்-ஒழியும். மார்த்தாண்டன்-கதிரவன். இவர-தவழ.
|
|
|
|