10. திருவெங்கைக் கலம்பகம் |
|
கொச்சகக்கலிப்பா |
|
|
பொடித்தமத னுயிர்படைத்துப் பொருவதுவும் வெவ்வரவங் கடித்தமதி பிழைத்தனலங் கால்வதுவு மாமுனிவன் குடித்தகடன் மறித்தெழுந்து குமுறுவது முன்னமுன்னைப் பிடித்தவினைச் செயலன்றோ பிரிவில்வெங்கைப் பெருமானே.
|
(86) |
|
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
|
|
மான்கொண்ட கரத்தர்திரு வெங்கைபுரத் தவர்பலகை வழங்கப் பெற்ற தேன்கொண்ட விசைப்பாண ரெனநினைப்ப லுனைப்பாண சிறப்பு நீத்த கான்கொண்ட தொடைப்புயத்தர் பெயர்மொழியா யெனிலவர்பேர் கழற லாற்றால் ஊன்கொண்ட மழுவலத்தோ ரிசைக்குடைந்த பாணனென வுள்கின் றேனே.
|
(87) |
|
கலிநிலைத்துறை |
|
|
உள்ளே னன்பர் தங்களொ டன்போ டுறும்வண்ணம் விள்ளேன் வஞ்சம் பொய்கொலை காமம் விடுகில்லேன் எள்ளே னங்கம் வெங்கைபு ரேசா வெனநேயங் கொள்ளே னெவ்வா றுய்குவ னந்தோ கொடியேனே.
|
(88) |
|
|
|
86. வெவ்வரவம்-கொடிய இராகு கேது, அனலம் கால்வதுவும்-தீயைக் கக்குவதும். மாமுனிவன்-அகத்தியர். 87. தேன் கொண்ட-தேனின் இனிமையைக் கொண்ட. கான்கொண்ட தொடை-மணத்தைக் கொண்ட மாலை. இசைக்குடைந்த பாணன்-ஏமநாதன். உள்குதல்-எண்ணுதல். 88. உள்ளேன்-நினையேன். விள்ளேன்-நீக்கேன். எள்ளேன்-இகழேன்.
|
|
|
|